மகாராஷ்டிரா மாநிலத்தில் 105 வயதுடைய தம்பதியினர் கொரோனா தொற்றிலிருந்து நம்பிக்கையுடன் மீண்டு வந்தது அவரது குடும்பத்தினரை மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
மகாராஷ்டிரா மாநிலம் தாண்டா கிராமத்தை சேர்ந்தவர் 105 வயது முதியவரான தேனு சவான் அவரது மனைவி மோட்டா பாய்(95). இவர்கள் சமீபத்தில் கொரோனா நோய் தொற்றால் பாதிக்கப்பட்டு லாதுரில் உள்ள மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்ட இந்த தம்பதிகள் ஆக்சிஜன் உதவியுடன் சுவாசித்துள்ளனர். இதனையடுத்து அவர்களுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் இந்த தம்பதிகள் மன தைரியத்துடனும், நம்பிக்கையுடன் இருந்ததால் கொரோனாவில் இருந்து மீண்டு வந்துள்ளனர்.
மேலும் இவர்களுக்கு சிகிச்சை அளித்த மருத்துவர்கள் சரியான நேரத்தில் மருத்துவமனைக்கு அழைத்து வந்ததால் எங்களால் காப்பாற்ற முடிந்தது என கூறியுள்ளனர். இதனைத்தொடர்ந்து இவர்களுக்கு கொரோனா தடுப்பூசியும் போடப்பட்டுள்ளது. கொரோனாவிலிருந்து மீண்டு வந்த 105 வயதான தேனு சவான் தனது கிராமத்தில் பள்ளி அமைப்பதற்கும், கிணறு வெட்டுவதற்கு தனது சொந்த நிலத்தை தனமாக வழங்கியது குறிப்பிடத்தக்கது.