Categories
திருச்சி மாவட்ட செய்திகள்

உங்களை தேடி நாங்களே வரோம்…. 105 வயது முதியவர் அளித்த வாக்கு…. சூடு பிடிக்கும் தேர்தல் களம்…!!

105 வயது முதியவர் தபால் மூலம் தனது வாக்கினை பதிவு செய்துள்ளார்.

தமிழகத்தில் வருகிற ஏப்ரல் மாதம் 6 ஆம் தேதி சட்டமன்ற தேர்தல் நடைபெற உள்ளது. இதற்காக தேர்தல் ஆணையம் 80 வயதை கடந்த முதியவர்களும், மாற்றுத்திறனாளிகளும் தபால் ஓட்டு மூலம் வாக்களிக்க அனுமதி அளித்துள்ளது. இந்நிலையில் திருச்சி மாவட்டத்தில் மாற்றுத் திறனாளிகள் மற்றும் முதியவர்களிடம் இருந்து தபால் வாக்கு சேகரிக்கும் பணியானது துவங்கியுள்ளது.

இதற்காக முசிறி தொகுதி தேர்தல் நடத்தும் அதிகாரி சர்மா மேற்பார்வையில் 2 குழுவினர் பலத்த காவல் துறையினர் பாதுகாப்புடன் தபால் வாக்கு சேகரிக்கும் பணியில் ஈடுபட்டு உள்ளனர். இதில் வடமலைப்பட்டி கிராமத்தில் வசித்து வரும் 105 வயதான முதியவர் கருப்பையா என்பவர் தபால் வாக்கு மூலம் தனது ஓட்டை பதிவு செய்துள்ளார். இவர் வாக்குச்சீட்டை சீல் வைக்கப்பட்ட பெட்டிக்குள் போட்ட பிறகு அலுவலர்கள் பெட்டியை பாதுகாப்புடன் வேனில் முசிறி அலுவலகத்திற்கு எடுத்துச் சென்றுள்ளனர்.

Categories

Tech |