இந்த ஆண்டு டி20 உலகக் கோப்பையின் சூப்பர் 12 ஸ்டேஜில் பாகிஸ்தானின் மிடில் ஆர்டர் பேட்டர் இப்திகார் அகமது மிக நீண்ட சிக்ஸரை அடித்தார்.
ஐசிசி டி20 உலக கோப்பை சூப்பர் 12 சுற்றில் நேற்று தென்னாப்பிரிக்கா மற்றும் பாகிஸ்தான் அணிகள் மோதியது. சிட்னியில் நடைபெற்ற இப்போட்டியில் டாஸ் வென்ற பாகிஸ்தான் அணி பேட்டிங்கை தேர்வு செய்தது. அதன்படி களமிறங்கிய பாகிஸ்தான் அணி 20 முடிவில் 9 விக்கெட்டுகளை இழந்து 185 ரன்கள் குவித்தது. அதிகபட்சமாக ஷதாப் கான் 22 பந்துகளில் 3 பவுண்டரி, 4 சிக்ஸர் உட்பட 52 ரன்களும், இப்திகார் அகமது 35 பந்துகளில் 3 பவுண்டரி, 2 சிக்ஸர் உட்பட 51 ரன்களும் எடுத்தனர்.
இதையடுத்து 186 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய தென்னாப்பிரிக்க அணி 9 ஓவர் முடிவில் 69 ரன்களுக்கு 4 விக்கெட்டுகளை இழந்து விளையாடி வந்த போது, மழை குறுக்கிட்டது. இதனால் போட்டி நிறுத்தப்பட்டு மீண்டும் டக்வொர்த் லூயிஸ் முறைப்படி தென்னாபிரிக்க அணி வெற்றி பெற 14 ஓவரில் 142 ரன்கள் இலக்காக நிர்ணயிக்கப்பட்டது. அதன் பின் ஆடிய தென்னாப்பிரிக்க அணி 14 ஓவரில் 9 விக்கெட்டுகளை இழந்து 108 ரன்கள் மட்டுமே எடுத்து தோல்வியடைந்தது. இதனால் பாகிஸ்தான் அணி டக்வொர்த் லூயிஸ் முறைப்படி 33 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்று அசத்தியது.
இந்நிலையில் இந்தபோட்டியில் பாகிஸ்தான் வீரர் இப்திகார் அகமது ஒரு மிகப்பெரிய சிக்ஸரை அடித்தார். பாகிஸ்தான் பேட்டிங் செய்யும் போது 16வது ஓவரில் தென்னாப்பிரிக்கா வலதுகை வேகப்பந்து வீச்சாளர் லுங்கி என்கிடியின் பந்துவீச்சில் 32 வயதான இப்திகார் மிட் விக்கெட் திசையில் 106 மீட்டர் சிக்ஸரை அடித்து சாதனை படைத்தார். டி20 உலகக்கோப்பை சூப்பர் 12 சுற்றில் இதுவே அதிக மீட்டர் சிக்ஸ் ஆகும். முன்னதாக மிகப்பெரிய சிக்ஸரை (104 மீட்டர்) டேவிட் மில்லர் இந்தியாவுக்கு எதிராக அடித்தார்.
இதற்கு முன் தகுதிச்சுற்று போட்டியில் இலங்கை அணிக்கு எதிராக ஐக்கிய அரபு அமீரக வீரர் ஜுனைத் சித்திக் 109 மீட்டர் சிக்ஸ் அடித்திருந்தது குறிப்பிடத்தக்கது.
https://twitter.com/AbbassFr/status/1588208824250519552
https://twitter.com/Faizangujjar333/status/1588159428020252672