கொரோனாவால் பாதிக்கப்பட்ட 106 வயது மூதாட்டி கோனி டிச்சன் சிகிச்சை பெற்று 3 வாரத்தில் குணமடைந்த சம்பவம் மக்களிடையே பெரும் மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
உலக அளவில் கொரோனா வைரசால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 20 லட்சத்தை (2,024,622) தாண்டியுள்ளது. உயிரிழப்புகள் 128,965 ஆக அதிகரித்துள்ளது. அதேபோல, குணமடைந்தவர்களின் எண்ணிக்கை 492,482 ஆக அதிகரித்துள்ளது. கொரோனவால் அதிகம் பாதிக்கப்பட்டுள்ள அமெரிக்காவில் இதுவரை 26,164 பேர் உயிரிழந்துள்ளனர். இன்று மட்டும் 117 பேர் இறந்துள்ளனர். ஸ்பெயினில் இதுவரை 18,579 பேர் இறந்துள்ளனர். இந்த நிலையில், பிரிட்டனில் இதுவரை கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 98,476 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.
இதுவரை உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 12,868 பேர் உயர்ந்துள்ளது. மேலும், கொரோனாவால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்றவர்களின் விவரங்கள் இன்னும் வெளியாகவில்லை. இந்த நிலையில், கொரோனாவால் பாதிக்கப்பட்ட 106 வயது மூதாட்டி, 3 வாரங்களில் சிகிச்சை பெற்று மீண்டு வந்துள்ளார். இது குறித்து அவர் கூறியதாவது, ” இந்த வைரஸை எதிர்த்துப் போராடிய அதிர்ஷ்டசாலி நான் என்று நினைக்கிறேன். எனது குடும்பத்தைப் பார்க்க மிகுந்த ஆர்வத்துடன் இருக்கிறேன்” என கூறியுள்ளார்.
இந்த மூதாட்டி மார்ச் மாதத்தில் நிமோனியா இருப்பதாக சந்தேகிக்கப்பட்டு இங்கிலாந்தில் உள்ள பர்மிங்காம் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். இதையடுத்து அவருக்கு COVID-19 இருப்பது கண்டறியப்பட்டது குறிப்பிடத்தக்கது. குணமடைந்த மூதாட்டியை கைதட்டி மகிழ்ச்சியுடன் அவரது வீட்டிற்கு மருத்துவ ஊழியர்கள் அனுப்பி வைத்தனர்.