108 ஆம்புலன்ஸ் ஓட்டுநர்கள் கடவுள் என்று நடிகருமான, மக்கள் நீதி மய்யம் கட்சி தலைவருமான கமல்ஹாசன் ட்விட்டரில் பாராட்டு தெரிவித்துள்ளார்..!
கொரோனா வைரஸ் நோய் தொற்றி கொள்ளும், வீட்டிற்கு வந்து விடு என்று பெற்றோர்கள் கதற, சேவையே முக்கியம் என்று 108 ஆம்புலன்ஸ் ஓட்டுநர் பாண்டி துறையின் மனிதநேயம் குறித்து செய்தி மூலம் அறிந்த மக்கள் நீதி மையம் கட்சியின் தலைவர் கமல்ஹாசன், பாண்டி துறையை நம்பிக்கை நாயகன் என்று பாராட்டியுள்ளார். இது தொடர்பாக ட்விட்டரில் பதிவிட்டுள்ள நடிகர் கமல்ஹாசன் இவர் போன்ற தன்னலம் பாராது பாரத நாட்டிற்கு முன்னெடுக்கும் வீரர்கள்தான் தேசத்தின் பாதுகாவலர்கள் என்றும், பெற்றோரின் குரல் உலுக்கினாலும், நாடு என்னவாகும் என்று கேட்கும் பாண்டித்துரையின் மனம் தான் கடவுள் என்றும் பாராட்டு தெரிவித்துள்ளார்.