Categories
கரூர் மாவட்ட செய்திகள்

பிரசவ வலியில் கர்ப்பிணி…. ஆம்புலன்ஸ் ஊழியர்களின் துரித நடவடிக்கை…. தாய் சேய் நலம்….!!

108 ஆம்புலன்ஸில் பெண்ணிற்கு பிரசவம் பார்த்த மருத்துவ உதவியாளர் சண்முகம் மற்றும் வாகன ஓட்டுனர் லோகேஷ் ஆகியோரை பெண்ணின் உறவினர்கள் பாராட்டியுள்ளனர்.

கரூர் மாவட்டத்தில் உள்ள களத்தூர் பகுதியில் சின்னத்துரை-கவிதா தம்பதியினர் வசித்து வருகின்றனர். கவிதாவிற்கு ஒரு குழந்தை உள்ள நிலையில் அவர் மீண்டும் கர்ப்பம் அடைந்துள்ளார். இரண்டாவது பிரசவத்திற்காக காணியாளம்பட்டி ஆரம்ப சுகாதார நிலையத்தில் அவர் அனுமதிக்கப்பட்டுள்ளார். மேல் சிகிச்சைக்காக அவர் கரூர் அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனைக்கு ஆம்புலன்ஸ் மூலம் அனுப்பி வைக்கப்பட்டுள்ளார். ஆம்புலன்ஸ் புலியூர் பகுதியில் வரும் போது கவிதாவிற்கு பிரசவ வலி அதிகரித்துள்ளதால் ஆம்புலன்ஸ் டிரைவர் வண்டியை ஓரமாக நிறுத்தியுள்ளார்.

ஆம்புலன்சில் இருக்கும் மருத்துவ உதவியாளர்களே அவருக்கு பிரசவம் பார்த்துள்ளனர். பிறகு கவிதாவிற்கு அழகான பெண் குழந்தை பிறந்துள்ளது. பின்னர் ஆம்புலன்சில் குழந்தையையும் தாயையும் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றுள்ளனர். பிரசவ வலி ஏற்பட்டதை பார்த்து தக்க சமயத்தில் துரிதமாக செயல்பட்ட மருத்துவ உதவியாளர் சண்முகம் மட்டும் வாகன ஓட்டுனர் லோகேஷ் ஆகியோரை அப்பெண்ணின் உறவினர்கள் பாராட்டியுள்ளனர்.

Categories

Tech |