Categories
தேசிய செய்திகள்

பீகாரில் மூளை காய்ச்சலால் “108 குழந்தைகள் பலி” முதல்வர் ஆய்வு..!!

பீகார் மாநிலத்தில் மூளை காய்ச்சல் பாதிப்பின் காரணமாக தொடர்ந்து குழந்தைகளின் எண்ணிக்கை 108 ஆக அதிகரித்துள்ள நிலையில் முதல்வர் ஆய்வு செய்தார் 

பீகார் மாநிலத்தில் உள்ள முசாபர்பூர் மாவட்டத்தில் கடந்த சில நாட்களுக்கு முன்பு குழந்தைகளுக்கு மூளை காய்ச்சல் இருப்பதாக கண்டறியப்பட்டு,முசாபர்பூரில் உள்ள ஸ்ரீ கிருஷ்ணா அரசு மருத்துவ கல்லூரி மற்றும் கெஜ்ரிவால் மருத்துவமனையிலும் சேர்க்கப்பட்டு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது. கடந்த ஒருமாதத்தில் மட்டும் 66 குழந்தைகள் மூளை காய்ச்சல் பாதிப்பால் உயிரிழந்தனர்.

Image result for 108 children die in brains in Bihar

இதன் காரணமாக முசாபர்பூர் மாவட்டத்தில் 8-ம் வகுப்பு வரையில் பள்ளிகளுக்கு 22-ம் தேதி வரையிலும், மேல் நிலை பள்ளிகளுக்கு காலை 10:30 மணி வரை மட்டுமே பள்ளிகள் செயல்படும் என்று அறிவிக்கப்பட்டது. இக்காய்ச்சலால்  பாதிக்கப்பட்டுள்ள ஏராளமான குழந்தைகளுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்த நிலையில் மூளை காய்ச்சலால் உயிரிழந்த குழந்தைகளின் எண்ணிக்கை 108 ஆக அதிகரித்துள்ளது. ஸ்ரீ கிருஷ்ணா அரசு மருத்துவ கல்லூரி மற்றும்  மருத்துவமனையில் 89 குழந்தைகளும், கெஜ்ரிவால் மருத்துவமனையில் 19 குழந்தைளும் உயிரிழந்துள்ளார்.
Image result for 108 children die in brains in Bihar
 பலியான பெரும்பாலான குழந்தைகளுக்கு ரத்தத்தில் குளுக்கோஸ் அளவு குறைவாக இருந்ததாக, முசாபர்பூர் சுகாதார துறை அதிகாரிகள் தெரிவித்தனர். இந்நிலையில் 108 குழந்தைகள் மூளை காய்ச்சல் பாதிப்பால் உயிரிழந்தது தொடர்பாக பீகார் முதல்வர் நிதிஷ் குமார் ஸ்ரீ கிருஷ்ணா அரசு மருத்துவ கல்லூரி மற்றும்  மருத்துவமனையில் ஆய்வு மேற்கொண்டு வருகிறார்.

Categories

Tech |