Categories
தூத்துக்குடி மாவட்ட செய்திகள்

“சிக்கியது 108 கிலோ தங்கம்” தூத்துக்குடியில் பரபரப்பு….!!

தூத்துக்குடியில் 108 கிலோ தங்கம் கொண்டு சென்ற வண்டி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திற்கு கொண்டு செல்லப்பட்டுள்ளது.

வருகின்ற ஏப்ரல் 18_ஆம் தேதி தமிழகத்தில் மக்களவை தேர்தலுடன் சேர்த்து 18 சட்டமன்ற இடைத்தேர்தலுக்கும் சேர்த்து வாக்குப்பதிவு நடைபெறுமென்று தேர்தல் ஆணையம் அறிவித்தது . மேலும் தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டவுடன் தேர்தல் நடத்தை விதி அமுலுக்கு வருவதாக தேர்தல் ஆணையம் அறிவித்ததையடுத்து பல்வேறு கட்டுப்பாடுகள் விதித்து தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டு வருகின்றது.தேர்தல் ஆணையம் சார்பில் பணப்பட்டுவாடாவை தடுக்க தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் தேர்தல் பறக்கும் படையினர் ஈடுபடுத்தப்பட்டு உரிய ஆவணம் இல்லாமலால் கொண்டு செல்லும் பணத்தை முதலிய பொருட்களை கை பற்றி வருகின்றனர்.

கிலோ தங்கம்" க்கான பட முடிவு

 

அந்த வகையில் தமிழகத்தின் எல்லா இடங்களிலும் காவல்துறையினர் வாகனங்களை தீவிர சோதனைக்கு உட்படுத்தப்படுகின்றன. தூத்துக்குடி நகரில் தபால் தந்தி அலுவலகம் அருகே வாகனத்தில் கொண்டு வரப்பட்ட 108 கிலோ தங்கம் சிக்கியது. நகைக்கடைகளில் வினியோகம் செய்ய கர்நாடகாவில் இருந்து தங்கம் கொண்டுவரப்பட்டதாக தகவல் தெரிவிக்கப்பட்ட நிலையில் உரிய ஆவணங்கள் இல்லை என்று தெரிகின்றது. இதையடுத்து பறக்கும் படை அதிகாரிகள்  வாகன ஓட்டிகளிடம் தனிப்பட்ட விசாரணை நடந்து கொண்டிருக்கின்றனர். மேலும் வாகனம் பறிமுதல் செய்யப்பட்டு  மாவட்ட ஆட்சியர் அலுவலகத்துக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளது.

Categories

Tech |