தமிழகத்தில் கடந்த இரண்டு வருடங்களாக கொரோனா காரணமாக டிஎன்பிஎஸ்சி போட்டி தேர்வுகள் குறித்து அறிவிப்புகள் எதுவும் வெளியிடப்படாமல் இருந்தது. இந்த வருடம் டிஎன்பிஎஸ்சி போட்டி தேர்வுகள் குறித்த அறிவிப்புகள் வெளியிடப்பட்ட நிலையில் தேர்வுகள் அனைத்தும் முடிவடைந்து தேர்வு முடிவுகளை எதிர்நோக்கி தேர்வர்கள் காத்திருக்கின்றன. இந்நிலையில் நில அளவையர்,வரைவாளர் மற்றும் உதவி வரைவாளர் உள்ளிட்ட பதவிகளில் காலியாக உள்ள 1089 பணியிடங்களை நிரப்ப டிஎன்பிஎஸ்சி புதிய அறிவிப்பை வெளியிட்டுள்ளது.
இந்த பணிகளுக்கு ஆகஸ்ட் 27ஆம் தேதி வரை www.tnpsc.gov.in என்ற இணையதளத்தில் விண்ணப்பிக்கலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும் செப்டம்பர் 1 முதல் 3 வரை விண்ணப்பங்களில் திருத்தம் மேற்கொள்ளலாம். நவம்பர் 6ஆம் தேதி தேர்வு நடைபெறும் எனவும் மேலும் இது குறித்த கூடுதல் விவரங்களுக்கு டிஎன்பிஎஸ்சி அதிகாரப்பூர்வ இணையதள பக்கத்தை அணுகவும் என அறிவிக்கப்பட்டுள்ளது.