Categories
உலக செய்திகள்

109 பயணிகள் சென்ற விமானம்…. தரையிறங்கிய போது…. ஏற்பட்ட விபத்து…!!

பயணிகளுடன் சென்று கொண்டிருந்த விமானம் ஒன்று தீடிரென்று தீப்பிடித்துள்ளது  அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 

ரஷ்யாவில் பயணிகள் சென்றுள்ள விமானம் ஒன்று yakutiya என்ற நகரிலிருந்து தலைநகரான மாஸ்கோவுக்கு சென்றுள்ளது.  இந்த விமானமானது yakutiya ஏர்லைன்ஸிற்கு உரியதாகும்.  இந்நிலையில் ரஷ்ய பயணிகளுடன் சென்ற இவ்விமானமானது மாஸ்கோ நகரில் உள்ள Vnukova என்ற விமான நிலையத்தில் தரையிறங்கியுள்ளது. அப்போது தீடிரென எதிர்பாராத விதமாக ஓடு பாதையை விட்டு விலகி சென்று விபத்துக்குள்ளானது.

அப்போது இந்த விமானத்தில் 109 நபர்கள் இருந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இதுகுறித்து மாஸ்கோ அவசர உதவி குழு தெரிவித்துள்ள தகவலின்படி பயணிகள் எவருக்கும் எவ்வித பாதிப்பும் ஏற்படவில்லை மற்றும்  சேதங்களும் ஏற்படவில்லை என்று கூறியுள்ளது. மேலும் இந்த விமானத்தில் இருந்த பயணிகள் பாதுகாப்பாக தரை இறங்கியுள்ளனர். மேலும் விபத்துக்குள்ளான விமானம் நிலையம் மூடப்படவில்லை என்ற தகவலும் வெளியாகியுள்ளது.

Categories

Tech |