வனவிலங்குகள் கடத்தல் தொடர்பாக 2 பெண்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.
தாய்லாந்தின் தலைநகர் பக்கிகாங் ஆகும். இங்கு சர்வதேச சுவர்ணபூமி விமான நிலையம் அமைந்துள்ளது. இங்கிருந்து சென்னைக்கு செல்வதற்காக ஜாகியா சுல்தானா இப்ராஹிம் மற்றும் நித்திய ராஜா என்ற 2 பெண்கள் வந்துள்ளனர். இவர்கள் 2 பேரையும் விமான நிலையத்தில் இருந்த பாதுகாப்பு அதிகாரிகள் சோதனை செய்துள்ளனர்.
அப்போது அவர்கள் வைத்திருந்த சூட்கேஸில் வனவிலங்குகள் இருந்துள்ளது. அதில் 20 பாம்புகள், 50 பல்லிகள், 2 முள்ளம்பன்றிகள் உள்ளிட்ட 109 வனவிலங்குகள் இருந்துள்ளது. இவற்றை சென்னைக்கு கடத்தி செல்ல முயன்றுள்ளனர். மேலும் 2 பெண்களையும் காவல்துறையினர் கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.