Categories
பல்சுவை வேலைவாய்ப்பு

10,906 காவலர் பணி… ஆன்லைனில் விண்ணப்பம்… இன்றுமுதல் தொடக்கம் …!!

தமிழகத்தில் 10,906 காவலர் பணியிடங்கள் காலியாக இருக்கும் நிலையில் அதற்கு தேர்வு நடைபெற இருக்கிறது. இந்த தேர்வுக்கு ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்கும் விதமாக அனைத்து நடைமுறைகளும் எளிதாக்கப்பட்டுள்ளது. இந்த காலி பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க விரும்புபவர்கள் இன்று முதல் விண்ணப்பிக்கலாம் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. தமிழக காவல்துறையில் ஓய்வு உள்ளிட்ட பல காரணங்களினால் பணியிடங்கள் காலி ஆகும் போது இரண்டாம் நிலைக் காவலர்கள் சீருடை பணியாளர் தேர்வாணையம் மூலமாக தேர்வு செய்யப்படுகின்றனர்.

சிறப்பு காவல்படை, ஆயுதப்படை, தீயணைப்புத் துறை ,சிறைத்துறை என ஒவ்வொன்றிற்கும் தனித்தனியாக தேர்ந்தெடுக்கப்படுகின்றனர். இதுபற்றிய அதிகாரப்பூர்வ அறிவிப்பு தற்போது வெளியாகியுள்ளது. காலியாக இருக்கும் 10,906 காவலர் பணியிடங்களுக்கு www.tnusrbonline.org என்ற இணையதளத்தில் இன்று முதல் விண்ணப்பிக்கலாம் என்றும் அக்டோபர் 26ஆம் தேதி விண்ணபிக்க கடைசிநாள் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.

டிசம்பர் 13 அன்று மாவட்ட வாரியாக எழுத்துத் தேர்வு நடக்கும் . 1.20 நிமிடங்கள் எழுத்துத் தேர்வுக்கு என்று நிர்ணயிக்கப்பட்டுள்ளது. எழுத்துத் தேர்வில் தேர்ச்சி பெற்றவர்களுக்கு உடல் தகுதித் தேர்வும் அதன்பிறகு நேர்முகத் தேர்வு நடத்தி தேர்வு செய்யப்படுவார்கள். ஆயுதப்படையில் இரண்டாம் நிலை காவலர் பதவிக்கு 3909 பெண்களும் 685 ஆண்களும் தேர்வு செய்யப்பட இருக்கின்றனர்.

இரண்டாம் நிலை காவலர் பதவிக்கு சிறப்பு காவல் படையில் 6,545 ஆண்கள் மட்டும் தேர்வு செய்யப்பட இருக்கின்றனர். இரண்டாம் நிலை காவலர் பதவிக்கு சிறைத்துறையில் 12 பெண்களும் 107 ஆண்களும் தேர்வு செய்யப்பட இருக்கின்றனர். தீயணைப்பு துறையில் 458 ஆண்கள் மட்டும் தேர்ந்தெடுக்கப்பட உள்ளனர்.

கல்வி தகுதி 

அனைத்து காலி இடங்களுக்கும் விண்ணப்பிப்பவர்கள் குறைந்தபட்ச கல்வித்தகுதி பத்தாம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டியது அவசியம். முதல் பாடமாக தமிழ் எடுத்து கற்றிருக்க வேண்டும். தேர்வுக்கு விண்ணப்பித்தவர்கள் இணை கல்வித் தகுதிக்கான சான்றிதழையும் சேர்த்து விண்ணப்பிக்கவேண்டும். இணைக்க தவறினால் உரிய கல்வித் தகுதியாக ஏற்க இயலாது.

வயது தகுதி

பணியிடங்களுக்கு விண்ணப்பிப்பவர்கள் ஜூலை  1, 2020 அன்று 18 வயது பூர்த்தி அடைந்தவராகவும் 24 வயதிற்கு மேற்பட்டவராக இருத்தல் வேண்டும். ஜூலை 2002 பிறந்தவராகவோ அல்லது அதற்கு முன்னர் பிறந்தவராக இருக்க வேண்டும். 1996-ஆம் வருடம் ஜூலை மாதம் பிறந்தவராக அல்லது அதற்குப் பிறகு பிறந்தவராக இருக்க வேண்டும்.

சில பிரிவினருக்கு வயது வரம்பு கீழ்க்கண்டவாறு வழங்கப்பட்டுள்ளது.

ஜெனரல் – 18 முதல் 24 வயது வரை

பிற்படுத்தப்பட்டோர், மிகவும் பிற்படுத்தப்பட்டோர், சிறுபான்மையினர் – 18 முதல் 20 வயது வரை

பட்டியலினத்தவர் – 18 முதல் 29 வயது வரை

முன்னாள் ராணுவத்தினர் – 18 முதல் 45 வயது வரை

ஆதரவற்ற விதவை பெண்கள் – 18 முதல் 35 வயது வரை

விண்ணப்பம் தேர்வுகள் குறித்த விவரம் போன்ற தகவல்களை கீழ் கண்ட தேர்வு வாரிய இணைப்பில் பார்க்க முடியும்.

https://tnusrbonline.org/pdfs/CR_2020_Notification.pdf

By inza dev

IF YOU WANT TO KNOW MEANS THEN TRY TO FIND ME AND ASK ME

Categories

Tech |