Categories
நீலகிரி மாவட்ட செய்திகள்

10மாசம் திறக்கல…! இனி எல்லாரும் வாங்க… ஆனால் கட்டுப்பாடு நிச்சயம்…. முதுமலை புலிகள் காப்பகம் திறப்பு …!!

10மாதங்களாக மூடப்பட்டிருந்த முதுமலை புலிகள் காப்பகம் பல்வேறு கட்டுப்பாடுகளுடன் இன்று திறக்கப்படும் என்று அதன் கள இயக்குனர் கவுசல் அறிவித்துள்ளார்.

கொரோனா தொற்று காரணமாக கடந்த 10 மாதங்களாக அனைத்து சுற்றுலா தளங்களும் மூடப்பட்டிருந்தது. தற்போது கட்டுப்பாடுகளுடன் சில சுற்றுலா தலங்கள் திறக்க அரசு அனுமதி அளித்துள்ளது.ஆசியாவிலேயே மிகப்பெரிய வனவிலங்கு சரணாலயமான முதுமலை புலிகள் காப்பகம் சில கட்டுப்பாடுகளுடன் இன்று திறக்கப்படும் என்று அதன் கள இயக்குனர் கவுசல் தெரிவித்துள்ளார்.

கட்டுப்பாடுகள் குறித்து அவர்கூறியதாவது,சுற்றுலா பயணிகள் அனைவரும் மூன்றடுக்கு முகக்கவசம் அணிந்து வரவேண்டும். அவர்கள் எங்கிருந்து வருகிறார்களோ அதற்கான அடையாள அட்டையை கட்டாயம் கொண்டு வர வேண்டும். முதுமலை புலிகள் காப்பகத்தில் சுற்றுலா பயணிகள் நுழையும் போது இரண்டு மீட்டர் இடைவெளியை கடைபிடிக்க வேண்டும். வாகன சவாரியில் 50% சுற்றுலா பயணிகளுக்கு மட்டுமே அமர அனுமதி அளிக்கப்படும் என்று தெரிவித்தார்.

Categories

Tech |