Categories
தேசிய செய்திகள்

33 வருடத்திற்கு பிறகு….. கொரோனாவால் 10-வது பாஸ்…. வைரலாகும் பெரியவர்…!!

கொரோனா  பாதிப்பை கருத்தில் கொண்டு பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வு ரத்து செய்யப்பட்டதால் 33 வருட போராட்டத்திற்கு பிறகு 51 வயதான நபர் ஒருவர் பத்தாம் வகுப்பில் தேர்ச்சி பெற்றுள்ளார்.

கொரோனா பாதிப்பை தடுப்பதற்காக மத்திய மாநில அரசுகளும் சுகாதாரத்துறை அதிகாரிகளும் பல்வேறு நடவடிக்கைகளைத் தொடர்ந்து மேற்கொண்டு வருகின்றனர். பாதிப்பை கட்டுப்படுத்துவதற்காக கடந்த மார்ச் 23ஆம் தேதி முதல் ஜூலை 31-ஆம் தேதி வரை ஊரடங்கு 6 கட்ட நிலையில் அமல்படுத்தப்பட்டிருந்த நிலையில்,

தற்போது ஆகஸ்ட் 31-ஆம் தேதி வரை பல்வேறு மாநிலங்களில் மீண்டும் ஊரடங்கை நீட்டித்து அந்தந்த மாநில அரசுகள் பாதிப்பின் அளவை பொருத்து உத்தரவிட்டு வருகின்றனர். இந்நிலையில் கொரோனா பாதிப்பு அதிகரித்து வரும் இந்த சூழ்நிலையில் மாணவர்களுக்கு தேர்வு நடத்துவது சரியாக இருக்காது என தேர்வை ரத்து செய்து அனைத்து மாணவர்களும் தேர்ச்சி என்ற உத்தரவை தமிழக அரசு வழங்கியது. அதன்படி,

முதன்முறையாக பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வை ரத்து செய்து மாணவர்கள் அனைவரும் தேர்ச்சி பெற்றதாக தமிழ்நாடு அரசு அறிவித்தது. அதே போல்,  இந்தியாவின் பிற பகுதியில் இருக்கக்கூடிய மாநில அரசுகளும் 10 ஆம் வகுப்பு பொது தேர்வை ரத்து செய்து தங்கள் மாநில மாணவர்கள் அனைவரும் தேர்ச்சி என்ற அறிவிப்பை வெளியிட்டது. அந்த வகையில்,

ஹைதராபாத்தைச் சேர்ந்த 51 வயதான முகமது நூருதீன்  என்பவர் கடந்த 33 வருடங்களாக பத்தாம் வகுப்பு தேர்வில் தோல்வியடைந்து வந்துள்ளார். இந்நிலையில் கொரோனா பாதிப்பு காரணமாக பத்தாம் வகுப்பு மாணவர்கள் அனைவரும் தேர்ச்சி பெற்றதாக தெலுங்கானா அரசு அறிவித்திருந்தது.

அதிர்ஷ்டவசமாக இந்த வருடமும் பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வு எழுதுவதற்காக இவர் அப்ளை செய்து இருந்தார். இதன் காரணமாக தேர்வு ரத்து செய்யப்பட்டதால் 33 வருட போராட்டத்திற்குப் பின், அவர் தேர்வில் வெற்றி பெற்றுள்ளார். இவரது விடாமுயற்சியை ஒரு சிலர் சமூக வலைதளங்களில் நகைக்கும் விதமாக கிண்டலடித்து வந்தாலும், பலர் இப்படி பலமுறை தோல்வியுற்ற பின்பும், வெற்றிக்காக போராடிய இவருக்கு வாழ்த்துக்கள் தெரிவித்து வருகின்றனர். 

Categories

Tech |