2022- 2023ஆம் கல்வி ஆண்டு ஏப்ரல் 2023 10 ஆம் வகுப்பு பொதுத்தேர்வில் தனித்தேர்வர்கள் அறிவியல் பாட செய்முறை பயிற்சி வகுப்புகளில் சேர வழங்கப்பட்ட வாய்ப்பினை தவறவிட்டவர்கள், செய்முறைப் பயிற்சி வகுப்பில் சேர மீண்டும் ஒரு வாய்ப்பு வழங்கபட்டுள்ளதாக அரசு தேர்வு இயக்ககம் அறிவித்துள்ளது. அதன்படி 10-ம் வகுப்பு பொதுத்தேர்வுக்கான அறிவியல் பாட செய்முறை பயிற்சி வகுப்பில் சேர தனித்தேர்வர்கள் பதிவு செய்யலாம்.
டிச.,26 – 30-ந் தேதி வரை சம்பந்தப்பட்ட மாவட்ட கல்வி அலுவலகங்களை அணுகி 125 செலுத்தி தங்கள் பெயரை பதிவு செய்ய வேண்டும். விண்ணப்பத்தை dge1.tn.gov.in என்ற இணையதளத்தில் பதிவிறக்கம் செய்யலாம். பதிவு செய்தவர்கள், தங்களுக்கு ஒதுக்கப்படும் பள்ளிகளுக்கு சென்று பயிற்சி வகுப்பில் பங்கேற்கலாம்.