பத்து பதினொன்று பன்னிரண்டாம் வகுப்பு அரையாண்டு வினாத்தாள் சமூக வலைதளங்களில் முன்கூட்டியே வெளியிடப்பட்டுவிட்டதாக புகார்கள் எழுந்துள்ளது.
பத்தாம் வகுப்புக்கு கடந்த 13ஆம் தேதியும் 11 மற்றும் 12ம் வகுப்புகளுக்கு கடந்த 13ம் தேதியும் தொடங்கிய அரையாண்டு தேர்வுகள் வரும் 23ஆம் தேதி வரை நடைபெறுகின்றன. இந்நிலையில் ஹலோ என்னும் செயலியல் அரையாண்டு தேர்வு வினாத்தாள்கள் தேர்வுக்கு முன்னரே பதிவேற்றம் செய்யப்பட்டுவிட்டதாக கூறப்படுகிறது.
இன்று நடைபெறும் பத்தாம் வகுப்பு அறிவியல் தேர்வு வினாத்தாள் நேற்றைய தினமும் 12 ஆம் வகுப்பு வேதியல் தேர்வுக்கான வினாத்தாள் இரண்டு நாட்களுக்கு முன்னரும் வெளியானதாக கூறப்படுகிறது. இந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ள நிலையில் இதுகுறித்து பள்ளி கல்வித் துறை சார்பில் தீவிர விசாரணை நடைபெற்று வருகிறது.