Categories
Uncategorized கல்வி

10 மற்றும் 12-ம் வகுப்பு துணைத்தேர்வு முடிவுகள் இன்று வெளியீடு…!!

பத்து மற்றும் பன்னிரெண்டாம் வகுப்பு துணைத் தேர்வு முடிவுகள் இன்று வெளியிடப்படுகின்றன.

10, 12 மற்றும் பனிரெண்டாம் வகுப்பில் தேர்ச்சி பெறாதவர்களுக்கான துணை தேர்வுகள் கடந்த செப்டம்பர் மாதம் நடைபெற்றது. இந்த நிலையில் பத்தாம் வகுப்பு துணைத்தேர்வு முடிவுகள் இன்று காலை 11 மணிக்கும் பிளஸ் டூ துணைத் தேர்வு முடிவுகள் பிற்பகல் 2 மணிக்கும் வெளியிடப்படுகின்றன.

பிளஸ் 1 தேர்வு முடிவுகள் நாளை காலை 11 மணிக்கு வெளியிடப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. துணைத்தேர்வு எழுதிய தேர்வர்கள் தங்களது தேர்வு முடிவுகளை மதிப்பெண் பட்டியல் ஆகவே இணையதளத்தில் பதிவிறக்கம் செய்யலாம் எனவும் அரசு தேர்வுகள் துறை தெரிவித்துள்ளது.

Categories

Tech |