இந்த வருடம் 10 மற்றும் 12ம் வகுப்பு மாணவர்களுக்கு தேர்வு கிடையாது என்று மத்திய கல்வித்துறை அமைச்சர் தெரிவித்துள்ளார்.
கொரோனா பரவல் காரணமாக ஊரடங்கு அமலபடுத்தப்பட்டது. இதனால் பள்ளிகள் கடந்த 9 மாதங்களாக மூடப்பட்டுள்ளன. இந்நிலையில் மாணவர்களுக்கான ஆன்லைன் மூலமாக வகுப்புகள் நடத்தப்படுகிறது. மேலும் கல்லூரி மாணவர்களுக்கு ஆன்லைன் மூலமாக தேர்வுகள் நடத்தப்பட்டு வருகின்றன. இதையடுத்து சிபிஎஸ்இ மாணவர்களுக்கு ஆன்லைன் மூலமாக தேர்வுகள் நடத்தப்படாது என ஏற்கனவே அறிவிக்கப்பட்டது. வருடந்தோறும் சிபிஎஸ்இ 10 மற்றும் 12ம் மாணவர்களுக்கு ஜனவரி மாதம் செய்முறை தேர்வு நடைபெறும்.
இறுதி பொதுத்தேர்வு மார்ச் மாதம் முடிவடையும். ஆனால் இந்த வருடம் அது சாத்தியம் கிடையாது என்று மத்திய கல்வி அமைச்சர் ரமேஷ் பொக்ரியால் தெரிவித்துள்ளார். ஆனாலும் தேர்வு ரத்து செய்ய முடியாது என்பதால் எப்போது? எந்த முறையில் தேர்வு நடந்தது? என்பது குறித்து சம்பந்தப்பட்ட துறைசார்ந்த அதிகாரிகள் நிபுணர்களுடன் ஆலோசித்து முடிவு எடுக்கப்படும் என்று தெரிவித்திருக்கிறார்.