Categories
சற்றுமுன் மாநில செய்திகள்

10ஆம் வகுப்பு 22%, 12ஆம் வகுப்பு 12% ….. தனித்தேர்வு முடிவில் அதிர்ச்சி ….!!

கொரோனா பெருந்தொற்று பரவியதையடுத்து பொதுமுடக்கம் பிறப்பிக்கப்பட்டு கல்வி நிலையங்கள் அனைத்தும் அடைக்கப்பட்டன. மேலும் ஒன்றில் இருந்து பத்தாம் வகுப்பு வரை பயிலும் ரெகுலர் மாணவர்களுக்கு தேர்வு இன்றி அனைவரும் பாஸ் என தமிழக அரசு உத்தரவு பிறப்பித்தது. ஆனால் பத்தாம் வகுப்பு, பன்னிரண்டாம் வகுப்பு தனித்தேர்வு மாணவர்களுக்கு தேர்வு நடத்தப்பட்டது. கொரோனா காலத்தில் நடத்தப்பட்ட இந்த தேர்வு முடிவு கடந்த இரண்டு நாட்களாக அறிவிக்கப்பட்டு வருகிறது.

இதில் கிட்டத்தட்ட 39 ஆயிரம் பேர் எழுதிய பத்தாம் வகுப்பு தேர்வில் வெறும் 22 சதவீத மாணவர்கள் மட்டுமே தேர்ச்சி பெற்றுள்ளனர். அதாவது 8000 என்ற அளவில் மட்டும் தேர்ச்சி பெற்றுள்ளனர். அதேபோல் 40,000பேர் என்றளவில் எழுதிய பன்னிரண்டாம் வகுப்பு தேர்வில்வெறும் 12 சதவீத மாணவர்கள் மட்டுமே தேர்ச்சி பெற்றுள்ளனர்.

இதனால் பெற்றோர்களும் மாணவர்களும் அதிர்ச்சி அடைந்து இது தங்களுக்கு இழைக்கப்பட்ட அநீதி என புகார் தெரிவித்துள்ளனர். பொதுவாக பள்ளியில் படிக்கும் மாணவர்களுக்கு தேர்ச்சி இன்றி அனைவரும் பாஸ் என்று அறிவித்த தமிழக அரசாங்கம் எங்களுக்கும் அளித்திருக்க வேண்டும் என்று கோரிக்கை வைத்து வருகின்றனர்.

Categories

Tech |