தமிழகத்தில் ஊரடங்கு உத்தரவு வரும் 30ஆம் தேதி வரை நீட்டிப்பு செய்யப்பட்டுள்ளதாக தமிழக அரசு அறிவித்துள்ளது.
தமிழகத்தில் 10ஆம் வகுப்பு பொதுத்தேர்வு கடந்த மார்ச் 27ம் தேதியில் தொடங்கி ஏப்ரல் 13ம் தேதி இன்றோடு முடிப்பதற்கு அட்டவணைப்படுத்தப்பட்ட இருந்தது. கொரோனா அச்சுறுத்தல் காரணமாக ஊரடங்கு உத்தரவு அமல்படுத்தப்பட்டதால் தேர்வு ஒத்திவைக்கப்பட்டது. ஏப்ரல் 15ம் தேதிக்குப் பிறகு இதற்கான புதிய அட்டவணை வெளியிடப்படும் என முதலமைச்சர் தெரிவித்து இருந்தார். ஆனால் அதற்குப் பிறகு பத்தாம் வகுப்பு பொது தேர்வு ரத்து செய்யப்படுமா? என்ற ஒரு கேள்வி எழுந்தது.
பல ஆசிரியர்கள், மாணவர்கள் தேர்வை ரத்து செய்ய வேண்டும் என்ற கோரிக்கையை முன்வைத்தனர். இதனால் தேர்வு நடைபெறும் என்ற ஒரு சந்தேகம் தொடர்ந்தது. இதுகுறித்து தமிழக முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி தெரிவிக்கையில், 10ஆம் வகுப்பு தேர்வு என்பது ஒன்பதாம் வகுப்பு மாணவர்களான வழக்கமான தேர்வு கிடையாது. ஆண்டு இறுதியில் நடைபெறும் பொதுத் தேர்வை எழுத வேண்டியது அவசியமாக இருக்கிறது என்று தெரிவித்திருந்தார்.
இதனை மீண்டும் உறுதிப்படுத்தும் விதமாக பள்ளிக்கல்வித்துறை செயலாளர் தரப்பில் இருந்து விளக்கம் கொடுக்கப்பட்டுள்ளது. 10ஆம் வகுப்பு பொதுத் தேர்வு ஒத்தி வைக்கப்பட்டிருக்கிறதே தவிர ரத்து செய்யப்படவில்லை. இந்த தேர்வு எப்போது நடத்தப்படும் என்பது குறித்து அதிகாரிகளுடன் கலந்து ஆலோசித்த பின்னர் அறிவிக்கப்படும். இன்று தமிழக அரசு வரும் 30ஆம் தேதி வரை ஊரடங்கு உத்தரவை நீட்டித்துள்ளதால் பள்ளிக்கல்வித்துறை தற்போது இப்படி ஒரு விளக்கம் அளித்துள்ளது.