அஞ்சல் ஆயுள் காப்பீட்டுத் திட்டத்தில் நேரடி முகவர் பதவிகளுக்கான தேர்வு வரும் 20ஆம் தேதி நடைபெற இருக்கிறது. விருப்பமுள்ளவர்கள் இதில் கலந்து கொள்ளலாம்.
இடம்: சென்னை, திருவள்ளூர், செங்கல்பட்டு.
கல்வித்தகுதி: பத்தாம் வகுப்பு முடித்தவர்கள், அங்கன்வாடியில் வேலை பார்த்தவர்கள், பஞ்சாயத்து துறையில் வேலை பார்த்தவர்கள், ஆயுள் காப்பீட்டு நிறுவனத்தில் வேலை பார்த்தவர்கள் விண்ணப்பிக்கலாம்.
வயது: வரும் 25 ஆம் தேதியின்படி குறைந்தபட்சம் 18 வயது, அதிகபட்சம் 50 வயது நிரம்பியிருக்க வேண்டும்.
இந்த பதவிக்கு விருப்பமுள்ளவர்கள் தகுந்த சான்றுகளோடு வரும் 25ஆம் தேதி 11 மணிக்கு நேரில் வர வேண்டும் என்று கூறப்பட்டுள்ளது.