10ஆம் வகுப்பு தேர்வை தள்ளி வைக்க கோரி ஆசிரியர் சங்கங்கள் மனு தாக்கல் செய்துள்ளது.
தமிழகத்தில் வருகின்ற ஜூன் 15ஆம் தேதி முதல் 25ஆம் தேதி வரை 10ஆம் வகுப்பு பொதுத்தேர்வு நடைபெறுமென்று தமிழக அரசு அறிவித்தது. இதனை எதிர்த்து தமிழ்நாடு உயர்நிலை, மேல்நிலை பட்டதாரி ஆசிரியர் சங்க தலைவர் பகவத் சலம் சென்னை உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்துள்ளார். பொதுநல வழக்காகதொடரப்பட்ட இந்த வழக்கில் ஆசிரியர்களுடன் கலந்து ஆலோசிக்காமல் ஜூன் 15ஆம் தேதி முதல் பத்தாம் வகுப்பு தேர்வு நடைபெறுமென்று தமிழக அரசு தெரிவித்துள்ளது.
ஆசிரியருக்கு எந்த மாதிரியான பாதுகாப்பு நடவடிக்கையை மேற்கொள்ளும் என்று அரசு தெரிவிக்கவில்லை எனவே 10ஆம் வகுப்பு பொதுத்தேர்வை இரண்டு மாதம் தள்ளி வைக்க உத்தரவிட வேண்டும் என்றும் குறிப்பிட்டுள்ளார். ஏற்கனவே ஜூன் 15ஆம் தேதி நடக்கும் தேர்வை தள்ளிவைக்க வேண்டும் பத்துக்கும் மேற்பட்ட வழக்குகள் நீதிபதி சத்தியநாராயணன் தலைமையிலான அமர்வில் நிலுவையில் உள்ளதால் வருகின்ற ஜூன் 11ம் தேதி தற்போதுள்ள வழக்கும் சேர்த்து விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்படும் என தெரிகின்றது.