10ஆம் வகுப்பு பொதுத்தேர்வை அந்தந்த பள்ளியிலே எழுதலாம் என்று கல்வித்துறை தெரிவித்துள்ளது.
பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வை பொருத்தவரை வைக்கும் தமிழகம் முழுவதும் 3 ஆயிரத்து 825 தேர்வு மையங்கள் அமைக்கப்பட்டிருந்தன. ஒருசில தேர்வு மையங்களில் கிட்டத்தட்ட ஆயிரத்துக்கும் மேற்பட்ட மாணவர்கள் தேர்வு எழுதுவார்கள். ஆனால் பத்தாம் வகுப்பு இருக்கக்கூடிய பள்ளிகளின் எண்ணிக்கை என்று பார்த்தோமானால் சுமார் 12 ஆயிரம் பள்ளிகள் இருக்கின்றன.
இந்த பள்ளிகளில் உள்ள மாணவர்கள் வேறு வேறு தேர்வு மையங்களுக்குச் செல்லும் போது ஒரு குறிப்பிட்ட மையங்களில் ஒவ்வொரு வகுப்பறையிலும் இருபது அல்லது அதற்கும் மேற்பட்ட மாணவர்களும் அமரக் கூடிய ஒரு சூழ்நிலை ஏற்படும். ஆனால் தனிமனித இடைவெளியை கடைப்பிடித்து தேர்வை மாணவர்கள் எதிர்கொள்ளவேண்டும் என்கின்ற சூழலால் பத்தாம் வகுப்பு மாணவர்களுக்கு அந்தந்த பள்ளிகளிலேயே தேர்வு மையங்களை அமைக்கலாம் என்ற ஒரு முடிவை பள்ளி கல்வித்துறை எடுத்திருப்பதாக தெரிகிறது.
பள்ளிக்கல்வித்துறை செயலாளர் தலைமையில் வீடியோ கான்பரன்சிங் மூலம் மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர்களுடன் கூட்டம் தலைமைச் செயலகத்தில் நடத்தப்பட்டது. அந்த கூட்டத்தில் இந்த முடிவு எடுக்கப்பட்டதாக தெரிகிறது. இதனடிப்படையில் பார்க்கும் போது ஒவ்வொரு வகுப்பறையிலும் 10 மாணவர்கள் மட்டுமே அமர்ந்து, சமூக விலகலை உறுதி செய்து தேர்வை எழுத வேண்டும் என்று சொல்லப்பட்டுள்ளது.