Categories
மாநில செய்திகள்

வரும் கல்வி ஆண்டில் 10ம் வகுப்பு சமூக அறிவியல் ஒரே பாடப்புத்தகமாக மாற்றம்!

2 புத்தகங்களை கொண்ட 10ம் வகுப்பு சமூக அறிவியல், வரும் கல்வி ஆண்டில் ஒரே பாடப்புத்தகமாக மாற்றப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. 10ம் வகுப்பு சமூக அறிவியல் புதிய பாட புத்தகங்கள் தயாரான போது சிபிஎஸ்இ பாடப் புத்தகங்களுக்கு இணையாக அதிக பக்கங்கள் கொண்ட 2 தொகுதிகள் கொண்ட புத்தகங்களாக உருவாக்கப்பட்டன. இவற்றை குறைக்க வேண்டும் என்று கோரிக்கைகள் எழுந்தது.

இதனையடுத்து பாடத்திட்டங்களின் அளவு பல்வேறு வகுப்புகளில் குறைக்கப்பட்டுள்ளன. 2 புத்தகங்களை கொண்ட 10 ஆம் வகுப்பு சமூக அறிவியல், வரும் கல்வி ஆண்டில் ஒரே பாடப்புத்தகமாக மாற்றப்பட்டுள்ளது. மேலும் அதேபோல் 11 மற்றும் 12ம் வகுப்புகளில் கணிதம், இயற்பியல், வேதியியல் ஆகிய மூன்று பாடப் புத்தகங்கள் மட்டுமே இரண்டு தொகுதிகள் கொண்டதாக இருக்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது

Categories

Tech |