தனியார் பள்ளியில் பத்தாம் வகுப்பு பயிலும் மாணவர் ஒருவர் பள்ளி வளாகத்திலேயே தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
ஆந்திர மாநில ஸ்ரீகாகுலம் கிராமத்தில் இசட்.பி. என்ற தனியார் உயர்நிலைப் பள்ளியில், அதே பகுதியைச் சேர்ந்த தீபக் சார் என்பவர் பத்தாம் வகுப்பு படித்துவந்தார். இந்நிலையில், தீபக் தான் படிக்கும் பள்ளி வளாகத்திலேயே நேற்று காலை தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டார்.
இது குறித்து வழக்கை விசாரித்துவரும் உதவி ஆய்வாளர் கான்டாசாலா கூறுகையில், “இசட்.பி. பள்ளியில் படித்துவந்த தீபக் சார், அப்பள்ளி வளாகத்தில் தூக்கிட்ட நிலையில் இருந்தை அங்கு பணிபுரியும் பணியாளர் ஒருவர் இன்று காலை கண்டறிந்தார்.
இது தொடர்பாக பள்ளி நிர்வாகத்திடம் அவர் அளித்த தகவலின்பேரில் சம்பவ இடத்துக்கு காவல் துறையினர் விரைந்துசென்று மாணவரின் உடலை மீட்டு உடற்கூறாய்வுக்கு அனுப்பியுள்ளோம். இது தொடர்பாக வழக்குப்பதிவுசெய்து சம்பந்தப்பட்டவர்களிடம் விசாரணை மேற்கொண்டுவருகிறோம்” என்றார்