Categories
திருவள்ளூர் மாவட்ட செய்திகள்

“மதிப்பெண் குறைவாக வரும்” 10-ஆம் வகுப்பு மாணவன் எடுத்த விபரீத முடிவு…. அதிர்ச்சியில் குடும்பத்தினர்….!!

10-ஆம் வகுப்பு மாணவன் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

திருவள்ளூர் மாவட்டத்திலுள்ள நடராஜ் நகர் பகுதியில் ரவிச்சந்திரன் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு சதீஷ் என்ற மகன் இருந்துள்ளார். இந்நிலையில் சதீஷ் அப்பகுதியில் உள்ள தனியார் பள்ளியில் 10-ஆம் வகுப்பு படித்து விட்டு தேர்வு எழுதியுள்ளார். இந்நிலையில் சதீஷ் வீட்டில் உள்ள ஒரு அறைக்குள் சென்றுள்ளார். இதனையடுத்து நீண்ட நேரமாகியும் வெளியே வராததால் அவரது பெற்றோர் அறைக்குள் சென்று பார்த்தனர். அப்போது சதிஷ் மின்விசிறியில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டது தெரியவந்துள்ளது.

இதுகுறித்து தகவலறிந்த நசரத்பேட்டை காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று சதீஷின் உடலை மீட்டு கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துள்ளனர். இதுகுறித்து காவல்துறையினர் நடத்திய விசாரணையில் சதீஷ் தற்கொலை செய்து கொள்வதற்கு முன்பாக கடிதம் ஒன்றை எழுதியுள்ளார். அதில் 10-ஆம் வகுப்பு தேர்வில் மதிப்பெண் குறைவாக வரும், எனவே தனது படிப்பிற்காக மேற்கொண்டு செலவு செய்ய வேண்டாம் என கடிதத்தில் எழுதி வைத்து விட்டு தற்கொலை செய்து கொண்டது தெரியவந்துள்ளது. இதுகுறித்து நசரத்பேட்டை காவல்துறையினர் தொடர்ந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Categories

Tech |