Categories
கல்வி சற்றுமுன் மாநில செய்திகள்

10ஆம் வகுப்பு…. 11ஆம் வகுப்பு…. 12ஆம் வகுப்பு… தேர்வுகள் அறிவிப்பு – அமைச்சரின் முழு தகவல் …!!

ஒத்திவைக்கப்பட்ட அனைத்து பொதுத்தேர்வுகளையும் நடத்துவதற்கான அறிவிப்பை பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் வெளியிட்டார்.

மார்ச் 27ஆம் தேதியிலிருந்து நடைபெறுவதாக இருந்த பத்தாம் வகுப்பு தேர்வு ஊரடங்கு காரணமாக ஒத்திவைக்கப்பட்டுள்ளது. தற்போது ஜூன் ஒன்றாம் தேதி முதல் 12ம் தேதி வரை தேர்வுகள் நடைபெறும் என தெரிவிக்கப்படுள்ளது. அதற்கான அறிவிப்பையும் தமிழக பள்ளி கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் வெளியிட்டார். பத்தாம் வகுப்பு மாணவர்களைப் பொருத்தவரை 9 லட்சத்து 55 ஆயிரம் மாணவர்கள் தேர்வு எழுதுவதற்கான பதிவு செய்திருக்கிறார்கள்.

எல்லாருக்கும் தேர்வு:

கிட்டத்தட்ட 20 நாட்களில் மாணவர்கள் தேர்வை சந்திக்க இருக்கிறார்கள். இந்த நேரத்தில் பதினோராம் வகுப்பு மாணவர்களுக்கு ஒத்தி வைக்கப்பட்ட ஒரு தேர்வும் ஜூன் 2ஆம் தேதி நடைபெறும் என கூறியிருக்கிறார்கள். பன்னிரண்டாம் வகுப்பு பொருத்தவரை அனைத்து தேர்வுகளும் நடத்தப் பெற்று விட்டன. எனினும் இறுதித் தேர்வை நிறைய மாணவர்கள் ஊரடங்கு காரணமாக தேர்வு மையங்களுக்கு வந்து எழுத முடியவில்லை என்ற புகார் எழுந்ததால் அவர்களுக்கு மறு தேர்வு என்பது நடத்தப்படும் என்ற அறிவிப்பும் வெளியிடபட்டுள்ளது.

10ஆம் வகுப்பு தேர்வு அட்டவணை:

ஜூன் 1  மொழிப்பாடம்,

ஜூன் 3 ஆங்கிலம்,

ஜூன் 5ஆம் தேதி கணிதம்,

ஜூன் 8 ஆம் தேதி அறிவியல்,

ஜூன் 10ஆம் தேதி சமூக அறிவியல்

+1 விடுபட்ட தேர்வு: 

விடுபட்ட +1 தேர்வு ஜூன் 2ஆம் தேதி நடைபெறும்.

+2 தவறவிட்ட தேர்வு:

தவறவிட்ட +2 தேர்வு ஜூன் 4ஆம் தேதி நடைபெறும்

விடைத்தாள் திருத்தும் பணி:

பொதுத் தேர்வு நடத்துவதும் போது சமூக இடைவெளி சமூக இடைவெளி நிச்சயமாக பின்பற்றப்படும். மாணவர்களுக்கு எந்தவிதமான நோய்களும் ஏற்படாத வகையில் அதற்கு தேவையான நடவடிக்கைகளை என்பது நிச்சயம் மேற்கொள்ளப்படும் என்ற ஒரு உறுதியையும் அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்திருக்கிறார்.  அதே போல +2 விடைத்தாள் திருத்தும் பணி ஜூன் 10ஆம் தேதி முதல் 19ம் தேதி வரை 10 நாட்களுக்கு நடைபெறும் என்றும், 24 முதல் ஜூலை 4-ஆம் தேதி வரை +1 விடைத்தாள் திருத்தும் பணி நடைபெறும் என்று அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்தார்.

மாவட்ட நிர்வாகம் பொறுப்பு:

மாணவர்களுக்கு பொது போக்குவரத்து என்பது நிறுத்தம் நிறுத்தப்பட்டுள்ள நிலையில் மாணவர்கள் ஒரு இடத்திலிருந்து மற்றொரு இடத்திற்கு செல்வதற்கு தேவையான நடவடிக்கைகளை மாவட்ட நிர்வாகங்கள் மேற்கொள்ளும்.  தனியார் பள்ளிகள், அரசுப் பள்ளிகள் ஆகட்டும் அந்தந்த மாவட்ட கல்வி அலுவலர் மூலமாக இதற்கு தேவையான என்னென்ன நடவடிக்கைகளை வேண்டுமோ அதற்கான அறிவுறுத்தல் என்பது வழங்கப்படும் என்றும் பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்தார்.

Categories

Tech |