Categories
தேசிய செய்திகள்

Breaking: 10, 12ம் வகுப்புகளுக்கான சிபிஎஸ்இ பொதுத்தேர்வுகள் ரத்து..!!

நாடு முழுவதும் நடைபெற இருந்த சிபிஎஸ்இ 10 மற்றும் 12ம் வகுப்பு பொதுத்தேர்வுகள் ரத்து செய்யப்பட்டுள்ளன. ஜீலை 1 முதல் 15ம் தேதி வரை நடைபெற இருந்த தேர்வுகள் ரத்து செய்யப்பட்டுள்ளதாக உச்சநீதிமன்றத்தில் மனிதவள மேம்பாட்டுத்துறை தகவல் அளித்துள்ளது.

டெல்லி, மகாராஷ்டிரா, தமிழ்நாடு போன்ற மாநிலங்களில் தேர்வுகளை நடத்த இயலாத சூழல் இருப்பதால் தேர்வுகள் ரத்து செய்யப்படுவதாக மத்திய அரசு விளக்கமளித்துள்ளது. நாடு முழுவதும் கொரோனா அச்சுறுத்தல் காரணமாக அனைத்து பள்ளிகள், கல்லூரிகள் மூடப்பட்டுள்ளன.

நாடு முழுவதும் தற்போது பல தளர்வுகளுடன் 5ம் கட்ட ஊரடங்கு கடைபிடிக்கப்பட்டாலும், பள்ளிகள் திறப்பு குறித்து முடிவெடுக்கப்படவில்லை. அதேசமயம், அனைத்து மாநிலங்களிலும் 10 மற்றும் 12ம் வகுப்பு தேர்வுகள் ரத்து செய்யப்பட்டுள்ளன. 6 முதல் 12ம் வகுப்பு மாணவர்கள் அனைவரும் தேர்வுகள் இன்று தேர்ச்சி பெற்றுள்ளனர்.

ஆனால் நாடு முழுவதும் மத்திய அரசு பாடத்திட்டத்தின் கீழ் செயல்பட்டு வரும் 10 மற்றும் 12ம் வகுப்பு சிபிஎஸ்சி மாணவர்களுக்கு தேர்வுகள் நடத்துவதற்கான அனைத்து பணிகளையும் மத்திய அரசு மேற்கொண்டு வந்தது. இந்த தேர்வுகளை ரத்து செய்ய வேண்டும் எனக்கூறி ஓய்வு பெற்ற ராணுவ வீரர் உச்சநீதிமன்றத்தில் பொதுநல மனுவை தாக்கல் செய்திருந்தார்.

அதில், 10ம் வகுப்பு மாணவர்களுக்கு ஏற்கனவே ஒரு சில தேர்வுகள் நடைபெற்றுள்ளன. 2 அல்லது 3 பாடங்களுக்கான தேர்வுகள் மட்டுமே விடுபட்டுள்ளது. அதேபோல 12ம் வகுப்பு மாணவர்களுக்கும் ஒரு சில தேர்வுகள் மட்டுமே எஞ்சியுள்ளன. எனவே விடுபட்ட பாடங்களுக்கு ஜூலை 1 முதல் 15ம் தேதிக்குள் தேர்வுகளை நடத்த சிபிஎஸ்இ திட்டமிட்டுள்ளது.

நாடு முழுவதும் 4 லட்சத்திற்கு மேல் கொரோனா பாதிப்பு இருப்பதால், பொதுத்தேர்வு காரணமாக லட்சக்கணக்கான மாணவர்கள் பாதிக்கப்படுவர் என குறிப்பிடப்பட்டிருந்தது. இந்த மனு ஏற்கனவே விசாரணைக்கு வந்தபோது, இதுகுறித்து மத்திய அரசு பதிலளிக்க நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது. இந்த நிலையில் இந்த வழக்கு இன்று மீண்டும் விசாரணைக்கு வந்தபோது, மத்திய அரசு தரப்பில் ஆஜரான வழக்கறிஞர், 10 மற்றும் 12ம் வகுப்புகளுக்கான சிபிஎஸ்இ பொதுத்தேர்வுகள் ரத்து செய்யப்படுவதாக தகவல் அளித்துள்ளார்.

 

Categories

Tech |