Categories
மாநில செய்திகள்

11ஆம் தேதி முற்றுகை போராட்டம்… வைகோ கடும் கண்டனம்…!!!

இலங்கையில் முள்ளிவாய்க்கால் நினைவு தூண் இடிக்கப்பட்டதை கண்டித்து 11ஆம் தேதி வைகோ தலைமையில் போராட்டம் நடத்தப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

இலங்கை யாழ்ப்பாண பல்கலைக்கழகத்தில் அமைந்துள்ள முள்ளிவாய்க்கால் நினைவுத்தூணை அந்நாட்டு அரசு இரவோடு இரவாக இடித்து தள்ளி உள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அதனால் அப்பகுதியில் மாணவர்கள் திரண்டதால் பதட்டமான சூழல் நிலவி வருகிறது. முள்ளிவாய்க்கால் தூண் இடிப்பிற்கு பல்வேறு தலைவர்களும் கண்டனம் தெரிவித்து வருகிறார்கள். இலங்கை போரில் உயிரிழந்தவர்கள் நினைவாக அமைக்கப்பட்ட அந்த நினைவிடம் இரவோடு இரவாக இடிக்கப்பட்ட சம்பவம் உலகத் தமிழர்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

இந்நிலையில் முள்ளிவாய்க்கால் நினைவுத் தூண் இடிக்கப்பட்டதை கண்டித்து வைகோ தலைமையில் வரும் 11ம் தேதி சென்னையில் உள்ள இலங்கை தூணை தூதரகத்தை முற்றுகையிட்டு போராட்டம் நடத்தப்படும் என்று மதிமுக அறிவித்துள்ளது. படுகொலையின் அடையாளங்கள் கூட இருக்கக் கூடாது என்பதற்காக நினைவு முற்றத்தை சிங்கள அரசு இடித்துள்ளது என்று கண்டனம் தெரிவித்துள்ளார்.

Categories

Tech |