Categories
மாநில செய்திகள்

“11ஆம் வகுப்பு பொது தேர்வை ரத்து.”….. பரிசீலனை செய்ய முடிவு….. அரசு அதிரடி அறிவிப்பு….!!!!

தமிழ்நாட்டில் மாநில கல்வி கொள்கை உருவாக்குவதற்கு டெல்லி உயர்நீதிமன்ற ஓய்வு நீதிபதி முருகேசன் தலைமையில் குழு அமைக்கப்பட்டு கருத்து கேட்பு நடத்தப்பட்டு வருகின்றது. இந்நிலையில் இதற்கான ஆலோசனை கூட்டம் சென்னை அண்ணாநகர் பல்கலைக்கழகத்தில் நடைபெற்றது. இதில் பள்ளி கல்வித்துறை ஆணையர் நந்தகுமார் கலந்து கொண்டு  பள்ளிக்கல்வித்துறை சார்ந்த பல கருத்துக்களை தெரிவித்தார்.

அப்போது “நீட் தேர்வை வெறும் பத்தாயிரம் மாணவர்கள் எழுதுகின்றனர். இதற்காக ஐந்து லட்சத்திற்கும் மேற்பட்ட மாணவர்கள் படிக்க வேண்டிய சூழ்நிலையில் பாடத்திட்டங்களை வகுக்க வேண்டியுள்ளது. மேலும் 11-ம் வகுப்பு மாணவர்களுக்கான வகுப்புகளில் முழுமையான பாடங்கள் நடத்தப்படாமல் உள்ளது. 11ஆம் வகுப்பு மதிப்பெண் அடிப்படையில் உயர்கல்வி மாணவர்கள் சேர்க்கை நடைபெறாததால் பதினோராம் வகுப்பு மாணவர்களுக்கான பொது தேர்வை ரத்து செய்வது தொடர்பாக ஆலோசிக்கலாம்” என்று பரிசீலிக்கப்பட்டுள்ளது.

Categories

Tech |