Categories
திருநெல்வேலி மாவட்ட செய்திகள்

11ஆம் வகுப்பு மாணவியை…. “ஆபாசமாக வீடியோ எடுத்த டிரைவர்”… போக்சோவில் கைது செய்த போலீஸ்…!!

பதினொன்றாம் வகுப்பு படிக்கும் மாணவியை ஆபாசமாக வீடியோ எடுத்த நபரை போக்சோ சட்டத்தின் கீழ் காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.

திருநெல்வேலி மாவட்டம், திசையன்விளை அருகில் உவரியை அடுத்த ராமன்குடியில் வசித்து வருபவர் 32 வயதானநாகராஜன். இவர் லாரி டிரைவராக  இருக்கிறார். இவருக்கு மனைவியும், இரண்டு குழந்தைகளும் உள்ளனர். இந்நிலையில் இவர் 11-ம் வகுப்பு படிக்கும் மாணவி ஒருவரை ஆபாசமாக வீடியோ எடுத்து அதை தனது நண்பர்களுக்கு அனுப்பியுள்ளார். இதுகுறித்து 11- ம் வகுப்பு மாணவியின் பெற்றோர் காவல்துறையில் புகார் அளித்துள்ளனர். இப்புகாரின் பேரில் உவரி போலீஸ் இன்ஸ்பெக்டர் மகாலட்சுமி போக்சோ சட்டத்தின்கீழ் வழக்குப் பதிந்து நாகராஜனை கைது செய்தார்.

Categories

Tech |