Categories
மாநில செய்திகள்

11 அடையாள ஆவணங்களை கொண்டு வாக்களிக்கலாம்… தேர்தல் ஆணையம்…!!!

தமிழகம் முழுவதும் 234 தொகுதிகளில் மொத்தம் 88,937 வாக்குச் சாவடிகளில் காலை 7 மணிக்கு வாக்குப்பதிவு தொடங்கியது. 234 தொகுதிகளிலும் 3998 வேட்பாளர்கள் தேர்தல் களத்தில் உள்ளனர். கொரோனா பாதுகாப்பு விதிமுறைகளை முறையாக கடைப்பிடித்து உங்களது ஜனநாயகக் கடமையை நிறைவேற்றுங்கள். மேலும் பூத் ஸ்லீப் இல்லாதவர்கள் வாக்காளர் பட்டியலில் பெயர் இருந்தாலே வாக்களிக்கலாம் என தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. அதுமட்டுமன்றி வாக்காளர் பட்டியலில் பெயர் இல்லாதவர்கள் வாக்களிக்க முடியாது.

இந்நிலையில் ஆதார் அட்டை, ஓட்டுனர் உரிமம், பான் கார்டு, தேசிய மக்கள் தொகை பதிவேட்டில் இந்திய தலைமை பதிவாளர் வழங்கப்பட்ட ஸ்மார்ட் அட்டை, பாஸ்போட், புகைப்படத்துடன் கூடிய ஓய்வூதிய ஆவணம், மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதியளிப்புத் திட்டத்தின் பணி அட்டை, புகைப்படத்துடன் கூடிய வங்கி அல்லது அஞ்சலகத்தில் புத்தகங்கள் ஏதாவது ஒன்றை எடுத்துச் சென்று வாக்களிக்கலாம்.

Categories

Tech |