திருவாரூர் மாவட்டத்தில் 3-வது நாளாக 11 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி ரேஷன் கடை ஊழியர்கள் போராட்டத்தில் ஈடுபட்டார்கள்.
திருவாரூர் மாவட்டத்தில் உள்ள தாசில்தார் அலுவலகம் முன்பாக ரேஷன் கடை ஊழியர்கள் 11 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி சென்ற ஏழாம் தேதி முதல் வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றார்கள். மூன்றாவது நாளாக நேற்றும் வேலைநிறுத்தத்தில் ஈடுபட்டார்கள்.
இந்த போராட்டத்திற்கு மாவட்ட செயலாளர் ஹரிஹரன் தலைமை தாங்க துணைத் தலைவர் முருகானந்தம், இணைச்செயலாளர் சிவராஜ், நிர்வாகிகள் உள்ளிட்டோர் பங்கேற்றனர். மூன்றாவது நாளாக ரேஷன் கடைகள் மூடப்பட்டு இருந்ததால் அத்தியாவசிய பொருட்கள் வழங்கப்படவில்லை.