Categories
மாநில செய்திகள்

“11-ஆம் வகுப்பு மாணவர்கள் கவனத்திற்கு”….திறனறி தேர்வு… அரசு வெளியிட்ட அறிவிப்பு…!!!!!!!

நமது தமிழக அரசு அறிக்கை ஒன்றை  வெளியிட்டுள்ளது.

நமது தமிழக அரசு அறிக்கை ஒன்றை  வெளியிட்டுள்ளது. அதில்  பள்ளி மாணவ -மாணவிகள்  அறிவியல், கணிதம் சார்ந்த ஒலிம்பியாய்டு  போன்ற தேர்வுகளுக்கு அதிக அளவில் தயாராகி வருகின்றனர். அதேபோல் நமது தமிழ் மொழி இலக்கிய திறனை மேம்படுத்திக் கொள்ளும் வகையில் திறனறித்  தேர்வு அரசு தேர்வுகள் இயக்கம் மூலமாக நடத்தப்படுகிறது. இதில் 2022-2023 கல்வி ஆண்டில் அரசு பள்ளிகள் மற்றும் அனைத்து வகை பள்ளிகளில் 11-ஆம் வகுப்பு  படிக்கும் மாணவ-மாணவிகள் இத்தேர்வு எழுதலாம். இதற்கு விண்ணப்பிக்க விரும்பும் மாணவ-மாணவிகள் WWW.dge.tn.gov.in என்ற இணையதளத்தில் வருகின்ற ஒன்பதாம் தேதி வரை விண்ணப்பிக்கலாம்.

இந்த தேர்விற்கான பாடத்திட்டம் பத்தாம் வகுப்பு தமிழ் பாடம் ஆகும். இந்த தேர்வு வருகின்ற அடுத்த  மாதம் 1-ஆம் தேதி அன்று காலை 10 மணி முதல் மதியம் 12 மணி வரை நடைபெறும். அப்போது ஒரு கேள்விக்கு ஒரு மதிப்பெண் என்ற விகிதத்தில் 100 கேள்விகள் அ டங்கிய வினாத்தாள் வழங்கப்படும். மேலும் இந்த தேர்வுக்கு விண்ணப்பிக்கும் மாணவ-மாணவிகள்  தேர்வுக்கான நுழைவுச்சீட்டை மேற்கண்ட இணையதளத்தில் இருந்து பதிவிறக்கம் செய்து கொள்ளலாம். இதில் தேர்ச்சி பெறும் 1500 மாணவ-மாணவிகளில் 250 அரசு பள்ளி மாணவர்களுக்கும், 750 இரத  பள்ளி மாணவர்களுக்கும் மாதம் தோறும் 1,500 என 2  ஆண்டுகளுக்கு வழங்கப்படும் என அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

Categories

Tech |