Categories
திருநெல்வேலி மாவட்ட செய்திகள்

11-ஆம் வகுப்பு மாணவர் தற்கொலை…. விசாரணையில் தெரிந்த உண்மை…. கதறி அழுத பெற்றோர்…!!

பள்ளி மாணவர் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

திருநெல்வேலி மாவட்டத்தில் உள்ள முன்னீர்பள்ளம் ரயில்வே கேட் அருகே பள்ளி மாணவரின் சடலம் கிடந்ததை பார்த்து அதிர்ச்சியடைந்த பொதுமக்கள் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். அதன்படி சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற போலீசார் மாணவரின் உடலை கைப்பற்றி பாளையங்கோட்டை ஹைகிரவுண்ட் அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர்.

இதுகுறித்து வழக்குப்பதிவு செய்த போலீசார் நடத்திய விசாரணையில் சடலமாக மீட்கப்பட்ட மாணவர் முன்னீர்பள்ளம் பகுதியைச் சேர்ந்த ஜெயசீலனின் மகன் சதீஷ்(17) என்பது தெரியவந்தது. இவர் அரசு உதவி பெறும் தனியார் பள்ளியில் 11-ஆம் வகுப்பு படித்து வந்துள்ளார். ஜெயசீலன் வெளிநாட்டில் வேலை பார்த்து வருவதால் அவரது மனைவி தனது 2 மகன்களுடன் வசித்து வந்துள்ளார். இதில் மூத்த மகன் ஜே.சி.பி ஆபரேட்டராக வேலை பார்த்து வருகிறார். 2-வது மகன் சதீஷ் பள்ளியில் படித்து வந்துள்ளார்.

கடந்த சில நாட்களுக்கு முன்பு சதீஷின் செல்போன் காணாமல் போனது. இதனால் புதிய செல்போன் வாங்கி தருமாறு சதீஷ் தனது தாயிடம் தகராறு செய்து வந்துள்ளார். நேற்று காலை பள்ளிக்கு செல்வதாக கூறி வீட்டிலிருந்து சதீஷ் புறப்பட்டு சென்றுள்ளார். பின்னர் மன உளைச்சலில் ரயில் முன்பு பாய்ந்து தற்கொலை செய்து கொண்டது தெரியவந்தது. இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

Categories

Tech |