Categories
உலக செய்திகள்

11 குழந்தைகள் பத்தாது… இன்னும் 105 குழந்தைகள் வேணுமாம்… அடம்பிடிக்கும் ரஷ்ய தம்பதிகள்… கூத்தை பார்த்தீர்களா…?

ரஷ்யாவில் 11 குழந்தைகளுக்கு தாயான தம்பதிகள் தங்களுக்கு மேலும் 105 குழந்தைகள் வேண்டும் என்று கூறியுள்ள சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

உலகம் முழுவதும் மக்கள் தொகை அதிகரிப்பு காரணமாக கடும் அவதிப்பட்டு வரும் நிலையில் ரஷ்யாவை சேர்ந்த ஒரு தம்பதிகள் 11 குழந்தைகளை பெற்றுள்ளனர். ஆனால் அவர்களுக்கு இன்னும் 105 குழந்தைகள் வேண்டும் என்று கூறியுள்ளார். ரஷ்யாவை சேர்ந்த கிரிஸ்டினா ஓஸ்டுரக் என்பவர் 23 வயது பெண், இவருக்கு 56 வயதான காலிப் ஓஸ்டுரக் என்ற கணவர் இருக்கிறார். இவர்களுக்கு 11 குழந்தைகள் இருக்கின்றது. ஆனால் முதல் குழந்தை மட்டும் தான் இவர்களுக்கு பிறந்தது. மற்ற 11 குழந்தைகள் வாடகைத்தாய் முறையில் பிறந்த குழந்தைகள்.

https://www.instagram.com/p/CPlmCpmlV5t/?utm_source=ig_web_copy_link

கிரிஸ்டினாவுக்கு குழந்தைகள் என்றால் மிகவும் பிரியம். அதற்காக அதிக குழந்தைகளைப் பெற்றுக் கொள்ள வேண்டும் என்று விரும்புகிறார்கள். தற்போது பதினோரு குழந்தைகள் இருக்கும் நிலையில் மேலும் 105 குழந்தைகள் வேண்டும் என்று அவர்கள் கூறுகிறார்கள். அவர்கள் குழந்தையை பெற்றுக் கொள்ள என்ன வழி என தீவிரமாக யோசித்து வருகின்றன. ஆனால் ஒன்று மட்டும் தெரிகிறது. அவர்கள் 11 குழந்தையுடன் நிறுத்தப்போவதில்லை. கோடீஸ்வர தம்பதிகளான இவர்கள் இந்த 11 குழந்தைகளை பராமரிக்க வீட்டில் ஆட்கள் அமர்த்தி உள்ளன. அவர்களுக்கு உணவு மற்றும் ஆரோக்கியத்தை அவர்கள் கவனித்துக் கொள்கின்றனர். அவர்கள் சரியாக வேலை பார்க்கிறார்கள் என்பதை பார்ப்பது மட்டுமே கிரிஸ்டினாவுக்கும் அவரது கணவருக்கும் வேலை. இந்த குழந்தைகளின் புகைப்படம் சமூக வலைதளங்களில் பெரும் வைரலாகி வருகிறது.

Categories

Tech |