திருட்டு சம்பவங்களில் ஈடுபட்ட பிரபல கொள்ளையரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.
கன்னியாகுமரி மாவட்டத்திலுள்ள ராஜமங்கலம் அருகே வடக்கு கன்னக்குறிச்சி பகுதியில் மரிய ஜெபாஸ்தியன் என்பவர் வசித்து வருகிறார். இவர் கட்டிட காண்டிராக்டர் ஆக இருக்கிறார். இவருடைய மனைவி அனுத்சுகி ஆவார். இந்நிலையில் அனுத்சுகி குளித்துக் கொண்டிருக்கும் போது வீட்டிலிருந்த 11 பவுன் தங்க நகை மற்றும் ஒரு செல்போன் ஆகியவற்றை மர்ம நபர்கள் கொள்ளையடித்து விட்டு சென்றுள்ளனர். இதுகுறித்து அனுத்சுகி ராஜமங்கலம் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார்.
அந்த புகாரின்படி வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வந்துள்ளனர். அந்த விசாரணையில் பேயன்குழி தாணிவிளை பகுதியைச் சேர்ந்த மஹாராஜன் என்பவரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். இவரிடம் நடத்திய விசாரணையில் ஜெபாஸ்தியன் வீட்டின் ஜன்னல் வழியாக 11 பவுன் நகை மற்றும் செல்போனை திருடி சென்றது தெரியவந்தது. மேலும் மகாராஜன் மீது இரணியல் மற்றும் வெள்ளிச்சந்தை காவல் நிலையங்களில் 5 வழக்குகள் நிலுவையில் இருக்கிறது.