Categories
மாநில செய்திகள்

11 பெண் ஆட்சியாளர்கள்: சமநிலையை நோக்கி தமிழ்நாடு…!!!

தமிழகத்தில் மு.க ஸ்டாலின் தலைமையிலான அரசு அமைந்ததையடுத்து பல்வேறு அதிரடியான மற்றும்  மக்களுக்கு பயன்படும் வகையில் சிறப்பான நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. கொரோனா இக்கட்டான காலத்தில் மக்களுடைய நலனை கருத்தில் கொண்டு ரூபாய் 4 ஆயிரம் நிதி உதவி அறிவிக்கப்பட்டது. பேருந்துகளில் மகளிருக்கு இலவசமாக பயணம் செய்ய அனுமதி வழங்கப்பட்டது உள்ளிட்ட பல்வேறு நலத் திட்டங்களை முதல்வர் மு.க ஸ்டாலின் செயல்படுத்தி வருகிறார். இது மக்களிடையே நல்ல வரவேற்பை பெற்று வருகிறது.

அதுமட்டுமல்லாமல் பல்வேறு துறை அதிகாரிகளையும் அதிரடியாக மாற்றி வருகிறார். இந்நிலையில் தமிழ்நாட்டில் இருக்கும் 32 மாவட்டங்களில் 11 மாவட்டத்தில் பெண்கள் ஆட்சியாளர்களாக நியமிக்கப்பட்டுள்ளனர். அதன்படி, தெற்கில் தென்காசி, வடக்கில் சென்னை, கிழக்கில் திருவாரூர், மேற்கில் நீலகிரி என்று நான்கு திசையிலும் பெண்கள் ஆட்சியாளராக செயல்படுகின்றனர். கூடிய விரைவில் 19 மாவட்டங்களில் பெண்கள், 19 மாவட்டங்களில் ஆண்கள் என்று சமநிலையை நோக்கி தமிழ்நாடு முன்னேறிச் செல்கிறது.

Categories

Tech |