தமிழகத்தில் கடந்த இரண்டு மாதங்களுக்கும் மேலாக கோடை வெயில் மக்களை வாட்டி வதைத்துக் கொண்டிருக்கும் சூழலில், மக்களுக்கு சற்றும் குளிர்ச்சி ஊட்டும் விதமாக ஆங்காங்கே மழை பெய்து வருவதால் மக்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். இந்நிலையில் வெப்பச் சலனம் காரணமாக சென்னை உட்பட 11 மாவட்டங்களில் அடுத்த மூன்று மணிநேரத்திற்கு இடியுடன் கூடிய மழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
அதன்படி காஞ்சிபுரம், திருவள்ளூர், திண்டுக்கல், வேலூர், திருப்பத்தூர், திருச்சி, சிவகங்கை, ராணிப்பேட்டை, திருவண்ணாமலை மற்றும் கிருஷ்ணகிரி உள்ளிட்ட மாவட்டங்களில் இடியுடன் மழை பெய்ய வாய்ப்புள்ளதாக தெரிவித்துள்ளது.