வளிமண்டல சுழற்சி மற்றும் வெப்பச்சலனம் காரணமாக தமிழ்நாட்டில் 11 மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இதுகுறித்து வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில், சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு, தென்காசி, இராமநாதபுரம், சிவகங்கை, விருதுநகர், மதுரை, கோவை, நீலகிரி ஆகிய மாவட்டங்களில் மழை பெய்யும் என்று தெரிவித்துள்ளது.
Categories