Categories
சேலம் மாவட்ட செய்திகள்

11-ம் வகுப்பு மாணவன் தற்கொலை…. நீதி விசாரணை நடத்தனும்…. 1 கோடி கொடுக்கனும்…. கண்டன ஆர்ப்பாட்டம்..!!

ஆத்தூர் விடுதியில் 11- ஆம் வகுப்பு மாணவன் தற்கொலை செய்தது குறித்து நீதி விசாரணை கேட்டு போராட்டம் நடத்தப்பட்டது.

சேலம் மாவட்டம், பெத்தநாயக்கன்பாளையத்தில் உள்ள செங்காட்டு புத்தூரை சேர்ந்தவர் 11-ம் வகுப்பு மாணவன் தினேஷ். இவர் கடந்த 28- ம் தேதி அன்று ஆத்தூரில் உள்ள  ஆதி திராவிடர் நல விடுதியில் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளார். இந்நிலையில்  மாணவரின் மரணத்திற்கு நீதி விசாரணை கேட்டு சேலம் கலெக்டர் அலுவலகம் முன்பாக கண்டன போராட்டம் நேற்று நடத்தப்பட்டது. இந்த போராட்டம் அம்பேத்கரைட் பார்ட்டி ஆஃப் இந்தியா கட்சி சார்பாக நடத்தப்பட்டது.

கட்சியின் மாநில தலைவர் முருகன் தலைமை தாங்கிய இந்த போராட்டத்தில்  மாவட்ட தலைவர் செல்வ கண்ணன், மாவட்ட செயலாளர் சதாசிவம், மாணவனின் பெற்றோர் ஜெயராஜ், அமுதா உட்பட பலர்  பங்கேற்றனர். இந்த போராட்டத்தில்  மாணவனின் குடும்பத்தில் யாருக்காவது ஒருவருக்கு அரசு வேலை கொடுக்க வேண்டும். மேலும் குடும்பத்திற்கு ரூபாய் ஒரு கோடி நஷ்ட ஈடு கொடுக்க வேண்டும்  என பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி முழக்கங்கள் எழுப்பினார்கள்.

Categories

Tech |