துறையூரில் பள்ளி மாணவன் காணாமல் போன தேதியில் ஆசிரியை காணாமல் போனது குறித்து காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
திருச்சி மாவட்டம், துறையூரில் உள்ள தனியார் பள்ளியில்அப்பகுதியை சேர்ந்த 11-ம் வகுப்பு படித்து வந்த 17 வயது சிறுவன் கடந்த 5-ம் தேதி பள்ளிக்கு சென்றுள்ளார். ஆனால் நீண்ட நேரமாகியும் மாணவன் மாலை வீடு திரும்பவில்லை. இதனால் அதிர்ச்சி அடைந்த மாணவனின் பெற்றோர் பல இடங்களில் தேடியும் கிடைக்கவில்லை. இதனால் துறையூர் காவல் நிலையத்தில் மாணவனின் பெற்றோர் புகார் கொடுத்துள்ளனர்.
இப்புகாரின் பேரில் காவல்துறையினர் வழக்கு பதிந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இந்நிலையில் அதே பள்ளியில் பணிபுரியும் ஆசிரியை மாணவன் காணாமல் போன அதே தேதியில் மாயமாகியுள்ளார். இதனால் மாணவன் காணாமல் போன சம்பவத்திற்கும், ஆசிரியை காணாமல் போனதுக்கும் ஏதேனும் தொடர்பு உள்ளதா? என்ற கோணத்தில் காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.