Categories
மாநில செய்திகள்

11-ம் வகுப்பு மாணவர்களுக்கு…. மாதம் ரூ.1500 ஊக்கத்தொகை….. தமிழக அரசு அறிவிப்பு….!!!

தமிழகத்தில் 6 முதல் 12 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு தேர்வுகள் முடிவடைந்து பள்ளிகள் திறக்கப்பட்டு வழக்கம் போல பள்ளிகள் செயல்பட்டு வருகிறது. இதனிடையே மாணவர்களுடைய கல்வி திறனை வளர்க்கும் விதமாக அரசு சார்பாக பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகிறது. இந்த நிலையில்,தமிழ்மொழி இலக்கிய திறனை மேம்படுத்த திறனறித் தேர்வு திட்டத்தை தமிழக அரசு அறிவித்துள்ளது.

இந்த நிலையில், அதன்படி, 11-ம் வகுப்பு மாணவர்களுக்கு  10-ம் வகுப்பு தமிழ் பாடத்திட்டத்தின் அடிப்படையில் திறனறித் தேர்வு நடத்தப்படும். இதில் 50% மாணவர்கள் அரசுப் பள்ளிகளில் இருந்து தேர்வு செய்யப்படுவார்கள். தேர்வு செய்யப்படும் 1,500 மாணவர்களுக்கு மாதம் 1,500 ஊக்கத்தொகை வழங்கப்படும் என்றும் தெரிவித்துள்ளது.

Categories

Tech |