மகாராஷ்டிர மாநிலம் விரார் பகுதியில் 11 வயது சிறுமி மூன்று இளைஞர்களால் கூட்டு பலாத்காரம் செய்யப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
8ஆம் வகுப்பு படிக்கும் சிறுமி தனது அலைபேசியை பழுதுபார்ப்பதற்காக வீட்டுக்கு அருகில் உள்ள கடைக்கு சென்றபோது, தனது 21 வயது தோழியை சந்தித்து அவர்களுடன் சென்றதாக போலீசார் தெரிவித்துள்ளனர். இளம்பெண் சிறுமியை ஆள்நடமாட்டமில்லாத பகுதிக்கு அழைத்து வந்து அந்த இளைஞருக்கு தொலைபேசியில் அழைப்பு விடுத்துள்ளார். 20 மற்றும் 21 வயது இளைஞர்களால் சிறுமி துன்புறுத்தப்பட்டார். மேலும், வீடியோவும் பதிவுசெய்யப்பட்டது. நடந்த சம்பவத்தை வெளியில் சொன்னால் அந்த வீடியோ காட்சிகளை வெளியிடுவேன் என சிறுமியை அந்த 21 வயது பெண் மிரட்டியுள்ளார். இச்சம்பவம் வியாழக்கிழமை இரவு 7 மணியளவில் நடந்துள்ளது.
வெள்ளிக்கிழமை அதிகாலை 5.30 மணியளவில் சம்பந்தப்பட்ட இளைஞர் சிறுமியை விடுவித்துள்ளார். அதுவரை அந்த இளம் பெண்ணும் அந்த இடத்தில் இருந்ததாகவும், அந்த இளைஞர்கள் சிறுமிக்கு தொல்லை கொடுப்பதை பார்த்துக் கொண்டிருந்ததாகவும் போலீசார் கூறுகின்றனர். வெள்ளிக்கிழமை காலை சிறுமி வீட்டிற்கு வந்ததையடுத்து விரார் போலீசில் தாய் புகார் செய்ததை அடுத்து நான்கு பேர் கொண்ட கும்பல் கைது செய்யப்பட்டனர்.