Categories
உலக செய்திகள்

11 வயதில் காதல்…. அவர் வேறு ஒருவரை விரும்புகிறாள்…. 23 வது மாடியில் இருந்து குதித்த சிறுவன்….!!

ரஷ்யாவை சேர்ந்த 11 வயது சிறுவன் தான் விரும்பிய பெண் வேறொருவரை காதலித்ததால் 23 வது மாடியிலிருந்து கீழே விழுந்து தற்கொலைக்கு முயற்சி செய்துள்ளான்.

ரஷ்யாவை சேர்ந்த 11 வயதான மசார் என்ற  சிறுவன் தான் விரும்பிய பெண் வேறு ஒரு சிறுவனை காதலிப்பதை தெரிந்து தன் பெற்றோருக்கு கடிதம் எழுதி விட்டு தற்கொலை செய்ய முயற்சி செய்துள்ளான். அதனால் 23 வது மாடியிலிருந்து கீழே குதிக்க முயற்சிக்கும் போது கீழே டிரக் ஒன்று இருந்ததால் அந்த டிரக்கில் வந்து விழுந்தான். உயிருக்கு எந்த ஆபத்தும் இல்லை. ஆனால் பயங்கர காயங்களுடன் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறான்.

தனது பெற்றோருக்கு எழுதிய கடிதத்தில் ‘நீங்கள் எனக்கு அருமையான இளமை பருவத்தை கொடுத்தீர்கள் அதற்கு நன்றி’ என்றும் தான்  ஒரு பெண்ணை விரும்புவதாகவும் அவள் வேறொருவரை விரும்புவது தெரிந்ததால் தற்கொலை செய்து விட போவதாக அந்த கடிதத்தில் எழுதி இருக்கிறான்.

Categories

Tech |