தமிழகத்திற்கு 11.02 லட்சம் டோஸ் கோவிஷீல்டு தடுப்பு மருந்துகள் சென்னை வர உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
தமிழகத்தில் கடந்த சில நாட்களாக கொரோனா தொற்று தொடர்ந்து அதிகரித்து வந்த வண்ணமே உள்ளது. இதனால் மக்கள் பீதியில் உள்ளனர். இதற்காக தமிழக அரசு பல்வேறு கட்ட முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றனர். முக கவசம் அணிதல், சமூக இடைவெளியை பின்பற்றுதல் போன்றவற்றை நடைமுறைப்படுத்தி வருகின்றது.
மேலும் மக்கள் அனைவரையும் தடுப்பூசி போட்டுக்கொள்ள வலியுறுத்தியுள்ளது. கொரோனா சற்று தீவிரமடைந்துள்ளதால் 2.14 லட்சம் டோஸ் கோவாக்சின் தடுப்பு மருந்துகள் சென்னை பொது சுகாதாரம் நோய் தடுப்பு மருந்து குடோனுக்கு வந்துள்ளது. மேலும் 11.02 லட்சம் டோஸ் கோவிஷீல்டு மருந்துகள் இன்று இரவு 7 மணிக்கு தமிழகம் கொண்டு வரப்படுகிறது. கட்டாயம் அனைவரும் தடுப்பூசி செலுத்து கொள்ள அறிவுறுத்தப்பட்டுள்ளது.