தமிழகத்தில் 11, 12ஆம் வகுப்பு மாணவர்களுக்கான பொதுத் தேர்வு அடுத்த ஆண்டு மார்ச் 13ஆம் தேதி தொடங்கி ஏப்ரல் ஐந்தாம் தேதி வரை நடைபெற உள்ளதாக அண்மையில் பள்ளி கல்வித்துறை அறிவித்தது. இந்த தேர்வை சுமார் 17.3 லட்சம் மாணவ மாணவர்கள் எழுத உள்ளனர். இந்நிலையில் பொதுத்தேர்வு எழுத உள்ள பிளஸ் 1 மற்றும் பிளஸ் டூ மாணவர்களுக்கான அகமதிப்பின் கணக்கிட தொடர்பான வழிகாட்டு நெறிமுறைகளை அரசு தேர்வுகள் இயக்ககம் வெளியிட்டுள்ளது. அதன்படி செய்முறை தேர்வு இல்லாத பாடங்களுக்கு பத்து மதிப்பெண்கள் அகமதிப்பீடாக வழங்கப்படும்.
மாணவர் வருகை பதிவுக்கு இரண்டு, பருவ தேர்வுக்கு 4, செயல்திட்டம் மற்றும் களப்பணிகளுக்கு இரண்டு, என்சிசி, கலை மற்றும் இலக்கிய போன்ற கல்வி இணை செயல்பாடுகளுக்கு இரண்டு இடம் மொத்தம் பத்து மதிப்பெண் கணக்கிடப்படும். செய்முறை தேர்வு உள்ள பாடங்களுக்கு 25 மதிப்பெண்கள் அகமதிப்பீடாக வழங்கப்படும். இந்த வழிகாட்டுதலை பின்பற்றி மாணவர்களுக்கு அகமதிப்பீடுகளை விரைந்து வழங்குவதற்கு தேவையான அனைத்து பணிகளையும் தலைமை ஆசிரியர்கள் மேற்கொள்ள வேண்டும் என உத்தரவிடப்பட்டுள்ளது.