உக்ரைனில் சிக்கியுள்ள 18,000 இந்திய மாணவர்களை மீட்கும் பணி நடைபெற்று வரும் நிலையில், அந்த மாணவர்கள் எந்தெந்த அயல்நாடுகளில் அதிகம் படிக்கிறார்கள் என்பது தொடர்பான தகவல்கள் வெளியாகியுள்ளது. இது குறித்து மத்திய வெளியுறவுத்துறை இணையமைச்சர் வி.முரளீதரன் தெரிவித்த தகவலின் அடிப்படையில்,
# 2.19 லட்சம் இந்திய மாணவர்களை கொண்டுள்ள ஐக்கிய அரபு அமீரகம் முதல் இடத்தில் இருக்கிறது.
# 2.15 லட்சம் இந்திய மாணவர்களை கொண்டுள்ள கனடா 2-ஆம் இடத்தில் இருக்கிறது.
# விசா கட்டுப்பாடுகள் கடுமையாக்கப்பட்டதன் காரணமாக முதலாவது இடத்தில் இருந்த அமெரிக்கா தற்போது 2.11 லட்சம் இந்திய மாணவர்களுடன் 3-ம் இடத்தில் இருக்கிறது.
# 92,383 இந்திய மாணவர்களை கொண்டுள்ள ஆஸ்திரேலியா 4-ஆம் இடத்தில் இருக்கிறது.
# 80,800 இந்திய மாணவர்களுடன் சவுதி அரேபியா 5-ஆம் இடத்தில் இருக்கிறது.
# 55,465 இந்திய மாணவர்களை கொண்டுள்ள பிரிட்டன் 6-வது இடத்தில் இருக்கிறது.
# 43,600 இந்திய மாணவர்களுடன் ஓமன் 7-வது இடத்தில் இருக்கிறது.
# 8-வது இடத்தில் உள்ள நியுசிலாந்தில் 30,000 இந்திய மாணவர்கள் உயர்கல்வி படிக்கின்றனர்.
# 18,000 இந்திய மாணவர்களுடன் 9-வது இடத்தில் உக்ரைனும், 16,500 இந்திய மாணவர்களுடன் 10ஆம் இடத்தில் ரஷ்யாவும் இருக்கிறது.
ரஷ்யா உக்ரைன் போர் காரணமாக அடுத்த கல்வி ஆண்டில் பிரிட்டன், ஜெர்மனி, ஸ்பேயின்ஆகிய நாடுகளுக்கு இந்திய மாணவர்கள் அதிகளவில் செல்ல வாய்ப்பு இருப்பதாக துறைசார் நிபுணர்கள் தெரிவிக்கின்றனர்.