கடலூரில் வழிப்பறியில் ஈடுபட்ட வாலிபரை காவல்துறையினர் கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
கடலூர் மாவட்டம் பண்ருட்டி பகுதியை அடுத்த விழாமங்கலம் பகுதியைச் சேர்ந்தவர் பிரபாகரன். இவர் நேற்று அதே பகுதியில் நடைப்பயிற்சி மேற்கொண்டிருந்த போது, இவரது பின்னால் வந்த வாலிபர் ஒருவர் திடீரென கத்தியை காட்டி மிரட்டி, அவரிடமிருந்து 2000 ரூபாய் பணம் மற்றும் செல்போனை பறித்துச் சென்று தப்பியோட, பிரபாகரன் காவல் நிலையத்தில் இது குறித்து புகார் அளிக்க சம்பவ இடத்தில் அதிகாரிகள் கண்காணிப்பில் ஈடுபட்டிருந்த போது,
வழிப்பறியில் ஈடுபட்ட அதே நபர் அப்பகுதியில் நடந்து வந்து கொண்டிருந்தார். திடீரென காவல்துறையினர் அவரைக் கண்டதும், பதறி அடித்துக் கொண்டு ஓட காவல்துறையினர் அவரை விரட்டி பிடிக்க முயற்சித்த போது அவர் கால் தவறி கீழே விழுந்து வலது கையில் பலத்த காயம் ஏற்பட்டது. இதையடுத்து அவரை கடலூர் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்து பின் விசாரணை மேற்கொண்டதில்,
அவர் வழிப்பறி செய்ததை ஒப்புக்கொண்டார். ஏற்கனவே அவர் மீது கொலை மிரட்டல், பெண்களுக்கு எதிரான வன்கொடுமை, வழிப்பறி, கொலை முயற்சி உள்ளிட்ட 10க்கும் மேற்பட்ட வழக்குகள் இருப்பதாக காவல்துறையினர் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.