Categories
மாநில செய்திகள் வானிலை

11 மாவட்டங்களில் அடுத்த மூன்று மணி நேரத்திற்கு… பலத்த மழை பெய்யும்… வானிலை ஆய்வுமையம் தகவல்…!!!

தமிழகத்தில் அடுத்த 3 மணி நேரத்தில் 11 மாவட்டங்களில் இடியுடன் கூடிய கனமழை பெய்யும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

தமிழகத்தில் கடந்த சில நாட்களாக கோடை வெயில் வாட்டி வதைத்து வந்தது. இதனால் மக்கள் பெரும் அவதிக்கு உள்ளாகி வந்தனர். டவ்-தே புயல் காரணமாக தமிழகத்தில் பல மாவட்டங்களில் ஆங்காங்கே மழை பெய்து வந்தது. தற்போது சென்னை உள்ளிட்ட 11 மாவட்டங்களில் அடுத்த மூன்று மணிநேரத்திற்கு இடியுடன் கூடிய பலத்த மழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.

அதன்படி காஞ்சிபுரம், திருவள்ளூர், திண்டுக்கல், வேலூர், திருப்பத்தூர், திருச்சி, சிவகங்கை, ராணிப்பேட்டை, திருவண்ணாமலை, கிருஷ்ணகிரி உள்ளிட்ட மாவட்டங்களில் இடியுடன் பலத்த மழை பெய்ய வாய்ப்பு இருப்பதாக தெரிவித்துள்ளது. இதனால் மக்கள் சற்று மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

Categories

Tech |